இந்தியா

போதையில் கார் ஓட்டிய டிரைவர் : நடைபாதையில் பாய்ந்த கார் - பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் !

மது போதையில் கார் ஓட்டி வந்த ஓட்டுநர் நடைபாதையில் ஏற்றி விபத்து ஏற்படுத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதையில் கார் ஓட்டிய டிரைவர் : நடைபாதையில் பாய்ந்த கார் - பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் உள்ள எச்.எஸ்.ஆர் பகுதியில், நேற்று பிற்பகல் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று எதிரே வந்த இரு சக்கர வாகனங்களின் மீது மோதியுள்ளது.

திடீரென நடைபாதையில் இருந்த டீக்கடை முன் நின்றிருந்தவர்கள் மீது மோதியுள்ளது அந்த கார். இதனால் காயமடைந்த 6 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, அருகில் இருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்த வீடியோவை கொண்டு போலிஸார் விசாரித்ததில் கார் டிரைவர் குடிபோதையில் கார் ஓட்டியதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories