இந்தியா

சகிப்புத் தன்மைக்கும், அநீதிக்கும் ஒருபோதும் இங்கு இடமில்லை - சோனியா காந்தி பேச்சு!

மதவெறிக்கும், சகிப்புத்தன்மை அற்றவர்களுக்கும் இந்தியாவில் இடமில்லை என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

சகிப்புத் தன்மைக்கும், அநீதிக்கும் ஒருபோதும் இங்கு இடமில்லை - சோனியா காந்தி பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உண்மை, அகிம்சை, இரக்கம் மற்றும் அசைக்கமுடியாத தேசபக்தி ஆகியவையே இந்தியாவின் கொள்கை என குறிப்பிட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, 73வது சுதந்திர தினத்தை கொண்டாடும் ஜனநாயக நாடான இந்தியாவில் மதவெறி, மூட நம்பிக்கை, கும்பல் தாக்குதல், சகிப்புத்தன்மை மற்றும் அநீதிக்கு ஒருபோதும் இடமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பாகுபாடுக்கு எதிராக அனைவரும் இணைந்து குரல் கொடுப்பதே சுதந்திரத்தை உண்மையிலேயே மதிப்பதாக அர்த்தம் என தெரிவித்த அவர், நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதற்காக லட்சக்கணக்கானோர் தத்தம் இன்னுயிரை துச்சமென நினைத்து தியாகம் செய்து வருகின்றனர் என்பதை நினைவில் கொள்ளவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

சுதந்திர தினத்தையொட்டி, காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றிய பின்னர் சோனியா காந்தி இவ்வாறு பேசியுள்ளார்.

banner

Related Stories

Related Stories