இந்தியா

“அன்று வீடில்லா சிறுவன்; இன்று Forbes 30 உலக பிரபலங்களில் ஒருவர் ”: புகைப்படக் கலைஞரின் நெகிழ்ச்சிக் கதை!

டெல்லி தெருக்களில் வசித்து முன்னேறிய புகைப்படக் கலைஞர் விக்கி ராய், ஃபோர்பஸ் பத்திரிக்கை வெளியிட்ட 30 பிரபலங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

“அன்று வீடில்லா சிறுவன்; இன்று Forbes 30 உலக பிரபலங்களில் ஒருவர் ”: புகைப்படக் கலைஞரின் நெகிழ்ச்சிக் கதை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

டெல்லி தெருக்களில் வசித்து முன்னேறிய புகைப்படக் கலைஞர் விக்கி ராய், ஃபோர்பஸ் பத்திரிக்கை வெளியிட்ட 30 பிரபலங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

விக்கி ராய், 3 வயதிலேயே பெற்றோர்களால் கைவிடப்பட்டு தனது தாத்தாவின் தயவில் வாழ்ந்துள்ளார். அவரது தாத்தா அவ்வப்போது அவரை அடித்து சித்ரவதை செய்துள்ளார். அவற்றைப் பொறுக்கமுடியாமல் தாத்தாவிடம் பணத்தை திருடிக்கொண்டு தனது 11 வயதில் மும்பையை வீட்டை விட்டு வெளியேறி டெல்லி சென்றார்.

டெல்லியில் உண்ண உணவின்றி, தங்க இடமின்றிச் சிரமங்களை அனுபவித்தவர், ரயிலில் குடிநீர் விற்றுக் கிடைக்கும் பணத்தை வைத்தும், ‘தாபா’ எனும் உணவகங்களில் வேலை செய்து அங்கு மீதமாகும் உணவைச் சாப்பிட்டும் வாழ்க்கையை ஓட்டியுள்ளார்.

கெட்டுப்போன உணவுகளை உண்டதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஒருமுறை மருத்துவரிடம் சிகிச்சை பெறச் சென்றுள்ளார். அந்த மருத்துவரின் அறிவுரைப்படி ‘சலாம் பாலக்’ எனும் தொண்டு நிறுவனத்தின் மூலம் காப்பகத்தில் தங்கிப் பள்ளி படிப்பைத் தொடர்ந்தார்.

அங்கு, தனக்கு அறிமுகமான பிரிட்டிஷ் புகைப்படக் கலைஞர் ஒருவரால் ஈர்க்கப்பட்டு, தெருவோர மக்களின் வாழ்வியல் சார்ந்த புகைப்படங்களை எடுக்க விரும்பினார். விக்கி ராயின் ஆர்வத்தைப் புரிந்துகொண்ட தொண்டு நிறுவனம், அவரது 18வது வயதில் ரூ.499 மதிப்புள்ள சிறிய கேமராவை பரிசளித்து, கலைப்படைப்புக்கு வித்திட்டது.

“அன்று வீடில்லா சிறுவன்; இன்று Forbes 30 உலக பிரபலங்களில் ஒருவர் ”: புகைப்படக் கலைஞரின் நெகிழ்ச்சிக் கதை!

அதன்பின் தனது லட்சியத்தை நோக்கி பயணித்த விக்கி ராய், ‘ஸ்ட்ரீட் ட்ரீம்ஸ்' என்ற புகைப்பட கண்காட்சி நடத்தி, அதன் மூலம் பிரபலமாகி பல விருதுகளைக் குவித்து வருகிறார். தற்போது உலக அளவில் பிரபலமாகியிருக்கும் விக்கி ராய், ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் ‘30 வயதிற்குபட்ட 30 பிரபலங்கள்’ பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

இதுகுறித்துப் பேசும் விக்கி ராய், “நாம் நமக்காகவே பிரகாசிக்கும் நட்சத்திரங்களுடன் பிறந்தவர்கள் அல்ல; உயரத்துக்கு வரவேண்டுமானால் குப்பைகளை அனுபவிக்க வேண்டும் என்பதை நான் உணர்ந்தேன். புயல் இருளுக்குப் பின்னே சூரிய ஒளியை நம்புவதுதான், நீங்கள் முன்னேறி உயரத்தை எட்டுவதற்கான வழி” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories