இந்தியா

“காஷ்மீரில் முதலீடு செய்யத் திட்டம்” : முதல் ஆளாக உள்ளே நுழைய அஸ்திவாரம் போட்டது ரிலையன்ஸ்!

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் ரிலையன்ஸ் குழுமம் முதலீடுகளைச் செய்ய திட்டமிட்டுள்ளது.

“காஷ்மீரில் முதலீடு செய்யத் திட்டம்” : முதல் ஆளாக உள்ளே நுழைய அஸ்திவாரம் போட்டது ரிலையன்ஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நிலையில் அம்மாநிலத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் ஏராளமான முதலீடுகளை செய்ய உள்ளதாக அதன் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஜம்மு காஷ்மீரில் முதலீடு செய்ய தொழில்துறையினர் முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், ரிலையன்ஸ் குழுமங்களின் 42வது ஆண்டுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் முதலீடுகள் செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

முகேஷ் அம்பானி பேசும்போது, “ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் ரிலையன்ஸ் குழுமம் முதலீடுகளைச் செய்ய திட்டமிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் எத்தகைய முதலீடுகளை மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க வல்லுநர் குழு அமைக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்குவதும், புதிய தொழில்கள் தொடங்குவதும் எளிமையாக்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களும் காஷ்மீருக்குள் படையெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் ஆளாக அங்கு நுழைய அஸ்திவாரம் போட்டுள்ளது ரிலையன்ஸ்.

banner

Related Stories

Related Stories