இந்தியா

“நீ ராமர் வழி வந்தவன்; பாபர் வழி அல்ல” - இஸ்லாமிய MLAவை ‘ஜெய்ஸ்ரீராம்’ சொல்லச் சொன்ன பாஜக அமைச்சர்(Video)

ஜார்கண்டில் காங்கிரஸைச் சேர்ந்த இஸ்லாமிய எம்.எல்.ஏவை ஜெய் ஸ்ரீராம் என சொல்லச் சொல்லி கட்டாயப்படுத்திய பா.ஜ.க. அமைச்சரின் வீடியோ வைரலாகியுள்ளது.

“நீ ராமர் வழி வந்தவன்; பாபர் வழி அல்ல” - இஸ்லாமிய MLAவை ‘ஜெய்ஸ்ரீராம்’ சொல்லச் சொன்ன பாஜக அமைச்சர்(Video)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க. தலைமையில் 2 வது முறையாக மத்திய ஆட்சி அமைத்த நாள் முதல் இதுகாறும், நாடு முழுவதும் உள்ள சிறுபான்மையினர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் மீதான அடக்குமுறையும், தாக்குதல்களும் ஆர்.எஸ்.எஸ். நடத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் படுகாயமுற்றும், சிலர் உயிரையும் இழந்துள்ளனர்.

குறிப்பாக இஸ்லாமியர்களை குறிவைத்து ஜெய் ஸ்ரீராம் என கோஷமிடச் சொல்லி தாக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

“நீ ராமர் வழி வந்தவன்; பாபர் வழி அல்ல” - இஸ்லாமிய MLAவை ‘ஜெய்ஸ்ரீராம்’ சொல்லச் சொன்ன பாஜக அமைச்சர்(Video)

இந்த நிலையில், ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை வளாகத்திற்கு முன்பு அம்மாநில பா.ஜ.க. அமைச்சர் சி.பி.சிங் என்பவர், காங்கிரஸ் எம்.எல்.ஏ., இர்ஃபான் அன்சாரி என்பவரை ஜெய் ஸ்ரீராம் என சொல்லச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், இர்ஃபான் அன்சாரியிடம் நமது முன்னோர்கள் ராமர் வம்சத்தை சார்ந்தவர்கள்தான் என்றும் அவர்கள் பாபர் வழி வந்தவர்கள் இல்லை என்றும் கூறியுள்ளார். பா.ஜ.க. அமைச்சரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories