இந்தியா

சந்திரயான் 2 : விண்வெளி அறிவியலின் உச்சம்.. இந்தியாவை வியந்து பார்க்கும் உலக வல்லரசு நாடுகள் !

நிலவின் தென் துருவத்தை ஆராய நாளை சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படுகிறது. இந்தியாவின் இந்த முயற்சியை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.

சந்திரயான் 2 : விண்வெளி அறிவியலின் உச்சம்.. இந்தியாவை வியந்து பார்க்கும் உலக வல்லரசு நாடுகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

உலகில் மக்கள்தொகையின் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற பருவநிலை சூழலும் மாறி வருகிறது. குடிநீர், சுத்தமான காற்று இப்படியாக எதிர்கால சந்ததியின் வாழ்வாதாரங்ல: அனைத்தும் கேள்விக்குறியாகி உள்ளது.

”யாதும் புவியே , வாழ்வது நாமே” என்பதை அடிப்படையாகக்கொண்டு மற்ற கோள்களில் மனிதர்கள் வாழ்வதற்காக அடிப்படை தேவைகள் இருக்கின்றதா என்பதை ஆய்வு செய்து வருகின்றன உலக வல்லரசு நாடுகள்.

அந்த ஆராய்ச்சியின் ஒரு புரட்சியாக பார்க்கப்பட்டதுதான் நிலவில் முதன் முதலில் மனிதன் காலடி வைத்த நிகழ்வு. அதுவரையில் “ பாட்டி வடை” சுடுவதாக கதை சொல்லி நிலவை பார்த்த பலருக்கும் , நீல் ஆம்ஸ்ட்ராங் நட்டு வைத்த கொடி ஆச்சர்யத்தை விதைத்தது. இது விஞ்ஞானத்துக்கு கிடைத்த மாபெறும் வெற்றியாக பார்க்கப்பட்டது.

சந்திரயான் 2 : விண்வெளி அறிவியலின் உச்சம்.. இந்தியாவை வியந்து பார்க்கும் உலக வல்லரசு நாடுகள் !

அந்த அற்புத நிகழ்வு நடந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. தொடந்து நிலவின் மீதான ஆய்வுகள் தொடரும் வேளையில் , செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்புவதற்கான பணிகளும் ஒருபுறம் மும்மரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

புதிய கோள்களின் கண்டுபிடிப்பும், கண்டுபிடித்த கோள்களின் மீதான ஆய்வும் இன்றும் தொடந்துக்கொண்டேதான் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்திய ஆராய்ச்சி மையமான இஸ்ரோவால் கடந்த 2008ம் ஆண்டு அனுப்பப்பட்ட சந்திரயான் 1 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

அது நிலவின் நீர் இருப்பு குறித்த ஆய்வறிக்கைகளை அனுப்பி தனது பணியை செவ்வனே செய்து முடித்தது அதனை தொடர்ந்து சந்திராயன் 2 விண்கலத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கி , இதற்கான ஒப்புதலை கடந்த 2009ம் ஆண்டு பெற்றது இஸ்ரோ.

சந்திரயான் 2 : விண்வெளி அறிவியலின் உச்சம்.. இந்தியாவை வியந்து பார்க்கும் உலக வல்லரசு நாடுகள் !

கடந்த 10 ஆண்டுகளாக இதனை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று தற்போது வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. விண்ணில் களமிறங்க இருக்கும் இந்த விண்கலமானது, நிலவின் தென் துருவத்தை ஆராய இருக்கிறது. நிலவின் தென் துருவ பகுதி என்பது இருண்ட பகுதி என அழைக்கப்படுகிறது.

இருண்ட பகுதி என்றால் சூரிய வெளிச்சம் இல்லை என்பது அர்த்தமில்லை. அங்கு சூரிய வெளிச்சம் இருக்கும். ஆனால்,  அந்த பகுதியை பூமியில் இருந்து பார்க்க இயலாது. இதுவரையில் எந்த ஆராய்ச்சி மையமும் நிலவின் தென் துருவத்தை ஆராய விண்கலனை அனுப்பவில்லை.

இதுதான், தற்போது உலக வல்லரசு நாடுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளது. உலகின் அத்தனை ஆராய்ச்சி மையங்களும் தற்போது இந்தியாவை நோக்கி திருப்பியுள்ளது. குறிப்பாக இந்தியாவிற்கு முன்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்ட அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் மிகுந்த வியப்பில் இருக்கின்றன.

சந்திரயான் 2 : விண்வெளி அறிவியலின் உச்சம்.. இந்தியாவை வியந்து பார்க்கும் உலக வல்லரசு நாடுகள் !

சந்திரயான் 2 விண்கலம் கடந்த ஜூலை 15 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவின், சதிஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து அதிகாலையில் புறப்பட தயாராக இருந்த நிலையில் , விண்கலத்தினை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி (எம்.கே) 3 ராக்கெட்டில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடைசி 56 நிமிடங்களில் நிறுத்தப்பட்டது. இது ஒருபக்கம் ஏமாற்றமாக இருந்தாலும் பெரும் விபத்து முன்கூட்டியே தவிர்க்கப்பட்டதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்நிலையில், தொழிற்நுட்பக் கோளாறு முற்றிலும் சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும், இனிமேல் கோளாறு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

தற்போது சந்திரயான் 2 விண்கலனை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட் டவுன் தொடங்கியுள்ளது. நேற்று மாலை 6.43 மணிக்கு தொடங்கிய கவுண்ட் டவுன் இன்று மாலை சரியாக 2.43 மணிக்கு நிறைவடைந்து சந்திராயன் விண்ணில் பாய இருக்கிறது. நிச்சயம் நிலவின் இருண்ட பகுதியை சந்திராயன் 2 வெளிச்சத்திற்கு கொண்டுவரும் என நம்புவோம். இந்தியாவின் சந்திராயன் விண்வெளி ஆராய்ச்சியில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்த இருப்பதால், உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை உற்று நோக்கி வருகின்றன.

banner

Related Stories

Related Stories