இந்தியா

“சிக்கனையும், முட்டையையும் சைவத்துக்கு மாத்துங்க” : சிவசேனா எம்.பி கோரிக்கை ! - அடுத்து மீன், மட்டனா ?

சைவ உணவுப் பட்டியலில் சிக்கனையும், கோழி முட்டையையும் சேர்க்க வேண்டும் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் விடுத்த கோரிக்கை சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.

“சிக்கனையும், முட்டையையும் சைவத்துக்கு மாத்துங்க” : சிவசேனா எம்.பி கோரிக்கை ! - அடுத்து மீன், மட்டனா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு நாளும் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பிக்கள் வித்தியாசமான கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். இது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி வருகிறது.

அதுபோல், நேற்று முன்தினம் சித்தா, ஆயுர்வேதா, யுனானி போன்ற மருத்துவ துறை குறித்து விவாதங்கள் நடைபெற்றபோது, சிவசேனா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான சஞ்சய் ரவுத், சிக்கன் மற்றும் முட்டையை சைவ உணவாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

சஞ்சய் ரவுத் பேசுகையில், நந்துர்பர் பகுதிக்கு சென்றபோது, அங்குள்ள பழங்குடியின மக்கள் எனக்கு ஆயுர்வேத சிக்கன் என்ற உணவை அளித்தனர். அந்த சிக்கனை உண்பதின் மூலம் பல்வேறு உடல் உபாதைகள் வராமல் தடுக்கலாம் என அவர்கள் தெரிவித்தனர் என்றார்.

மேலும், கோழிக்கு ஆயுர்வேத உணவுகளை கொடுப்பதன் மூலம் ஆயுர்வேத முட்டைகளைப் பெறமுடியும் என்றும் இதனால் சைவ பிரியர்களும் ஆயுர்வேத முட்டைகளை உண்டு ஆரோக்கியமாக இருக்கலாம் என்றும் சஞ்சய் பேசியுள்ளார்.

சஞ்சய் ரவுத்தின் இந்த பேச்சு சமூக வலைதளத்தில் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது. அதில், சிக்கன், முட்டை மட்டுமல்லாமல் மாட்டிறைச்சியையும், ஆட்டிறைச்சியையும் சைவ பட்டியலில் சேர்க்க கோரிக்கை வைக்கலாம் எனவும் பதிவிட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories