இந்தியா

விண்ணில் செல்ல தயார் நிலையில் சந்திராயன் 2: 20 மணிநேர கவுண்ட் டவுன் தொடங்கியது!

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள சந்திராயன் 2 விண்கலம் நாளை அதிகாலை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது.

விண்ணில் செல்ல தயார் நிலையில் சந்திராயன் 2: 20 மணிநேர  கவுண்ட் டவுன் தொடங்கியது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008ம் ஆண்டு சந்திராயன் 1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. இதனையடுத்து 10 ஆண்டுகளுக்கு பின்னர் விண்ணில் செல்வதற்கு தயாராகிவிட்டது சந்திராயன் 2.

சுமார் 603 கோடி ரூபாய் செலவில், 2370 கிலோ எடையுடன் உருவாக்கப்பட்டுள்ள சந்திராயன் 2 விண்கலம், நாளை அதிகாலை (ஜூலை 15) 2.51 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான 20 மணிநேர கவுண்ட் டவுன் இன்று காலை 6.51க்கு தொடங்கியது.

விண்ணில் செல்ல தயார் நிலையில் சந்திராயன் 2: 20 மணிநேர  கவுண்ட் டவுன் தொடங்கியது!

வெப்பநிலையை ஆய்வு செய்யக்கூடிய கருவிகள், அதிநவீன கேமிராக்கள், லேசர் தொழில்நுட்பத்தில் செயல்படக் கூடிய கருவிகள் என சந்திராயன் 2 விண்கலத்தில் 13 வகையான நவீன கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளன.

மேலும், நாசாவின் Retro Reflector என்ற கருவியும் சந்திராயனுடன் நிலவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ள சந்திராயன் 2 விண்கலம் செப்டம்பர் மாதம், 6ம் தேதி நிலவை சென்றடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories