இந்தியா

குழந்தைகள் வல்லுறவு வழக்கு விசாரணையில் மெத்தனம் ஏன்? : நிலுவைகள் இருக்கும் வழக்குகள் எத்தனை?

குழந்தைகள் வல்லுறவு செய்யப்படும் வழக்குகளில் நீதி வழங்குவதில் பெரும் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் வல்லுறவு வழக்கு விசாரணையில் மெத்தனம் ஏன்? : நிலுவைகள் இருக்கும் வழக்குகள் எத்தனை?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

குழந்தைகள் வல்லுறவு செய்யப்படும் வழக்குகளில் நீதி வழங்குவதில் பெரும் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இது மிக கவலை தருவதாகவும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் குழந்தைகள் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்குகளில் நீதி வழங்குவது தாமதமாவதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து நாடு முழுவதும் ஆய்வு செய்து ஆய்வறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டிருந்தார்.

உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் மூலம் அதிர்ச்சியளிக்கக்கூடிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

குழந்தைகள் வல்லுறவு செய்யப்பட்டதாக போஸ்கோ சட்டத்தின்படி 24,212 முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டுள்ளன. இதில் 11,981 வழக்குகள் விசாரணையில் உள்ளது. 4,871 வழக்குகள் இறுதிக்கட்ட விசாரணையில் உள்ளன. இறுதிக்கட்ட விசாரணை அறிக்கை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டாலும், விசாரணை துவங்கவில்லை.

6,449 வழக்குகளில் விசாரணை முடிந்துவிட்டாலும் இறுதி முடிவு எடுக்கப்படாத நிலை நிலவுகிறது. 911 வழக்குகள் மட்டுமே நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பளிக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை மொத்த நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையில் 4 சதவீதம் மட்டுமே.

இந்தியாவில் குழந்தைகள் வல்லுறவுக் குற்றங்கள் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 3,457 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அடுத்தபடியாக மகாரஷ்ட்டிராவில் 1,940, ராஜஸ்தானில் 1,992, மேற்குவங்கத்தில் 1,551, கர்நாடகாவில் 1,133, குஜராத்த்தில் 1,124, தமிழகத்தில் 1,043 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

வழக்குகளின் அதிகப்படியான நிலுவைக்கு காரணமாக நீதிமன்றங்கள் குறைவு, நீதிமன்ற ஊழியர்கள் பற்றாக்குறை ஆகியவை தெரிவிக்கப்பட்டுள்ளன. வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் விசாரிக்கும் வசதிகளை அதிகப்படுத்தினால் விரைந்து வழக்குகள் விசாரித்து தீர்ப்பளிக்கப்படலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories