India

#LIVE மத்திய பட்ஜெட் 2019 : பங்குச்சந்தை சரிவு!

2019-20ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்து வருகிறார்.

#LIVE மத்திய பட்ஜெட் 2019 : பங்குச்சந்தை சரிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on
5 July 2019, 07:41 AM

- பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

சாலை, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பெட்ரோல், டீசல் மீது லிட்டருக்கு 1 ரூபாய் கூடுதல் வரி விதிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு

5 July 2019, 07:39 AM

- தங்கத்தின் மீதான கலால் வரி உயர்வு!

இறக்குமதி செய்யப்படும் புத்தகங்களுக்கு 5% வரி விதிக்கப்படும், தங்கத்துக்கான கலால் வரி 10 சதவிகிதத்தில் இருந்து 12.5% உயர்த்தப்படும்

5 July 2019, 07:33 AM

- 5 லட்சத்துக்கு குறைவாக வருமானம்: வரி இல்லை

ரூ.5 லட்சத்துக்கு கீழ் வருமானம் உள்ளவர்களுக்கு வரி விதிப்பு கிடையாது என மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

5 July 2019, 07:32 AM

- 5 கோடி வரை வருமானம்: கூடுதல் வரி!

2 கோடியில் இருந்து 5 கோடி ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும். 5 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 7% கூடுதல் வரி விதிக்கப்படும்.

5 July 2019, 07:28 AM

- 1 கோடிக்கு மேல் எடுத்தால் 2% வரி!

ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வங்கிக் கணக்கில் இருந்து ரொக்கமாக எடுத்தால் 2% பிடித்தம் செய்யப்படும் என அறிவிப்பு

5 July 2019, 07:27 AM

- இனி ஆதாரை கொண்டு வரி கட்டலாம்!

பான் அட்டை இல்லாவிட்டாலும் ஆதார் எண்ணை கொண்டு வருமான வரி தாக்கல் செய்யலாம் என பட்ஜெட்டில் அறிவிப்பு

5 July 2019, 07:25 AM

- ஆண்டுக்கு 400 கோடி வரை வர்த்தகம் செய்தால் 25% வரி விதிக்கப்படும்

#LIVE மத்திய பட்ஜெட் 2019 : பங்குச்சந்தை சரிவு!
5 July 2019, 07:24 AM

- மின்சார வாகனங்கள் வாங்குவோருக்கு ரூ.1.5 லட்சம் வரி விலக்கு அளிக்கப்படும்

#LIVE மத்திய பட்ஜெட் 2019 : பங்குச்சந்தை சரிவு!
5 July 2019, 07:19 AM

- பட்ஜெட் எதிரொலி: பங்குச்சந்தை சரிவு

2019-20ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருவதையொட்டி பங்குச்சந்தை சரிவடைந்தன.

5 July 2019, 07:15 AM

- கழிவு நீரை சுத்திகரித்து விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும்!

அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் 2024ம் ஆண்டுக்குள் குடிநீர், கழிவுநீர் வசதி ஏற்படுத்தப்படும் என்றும், கழிவு நீரை சுத்திகரித்து விவசாயத்துக்கு பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு

5 July 2019, 07:12 AM

- உலகதர கல்வி நிறுவனங்கள் உருவாக்க ரூ.400 கோடி ஒதுக்கீடு!

வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் படிப்பதற்கு ஏதுவாக உலக தர உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்க ரூ.400 கோடி ஒதுக்கப்படும்.

உயர் கல்வியை மேம்படுத்துவதற்காக உயர் கல்வி ஆணையம் அமைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

5 July 2019, 07:12 AM

- வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆதார் எண்!

இந்தியாவுக்கு திரும்பும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு உடனடியாக ஆதார் எண் வழங்கப்படும். தற்போது உள்ள 6 மாத கால காத்திருப்பு நீக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு

5 July 2019, 06:52 AM

- துப்புரவுப் பணிகளில் ரோபோக்களை பயன்படுத்த திட்டம் - நிர்மலா சீதாராமன்

#LIVE மத்திய பட்ஜெட் 2019 : பங்குச்சந்தை சரிவு!

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை மாற்றுவதற்காக ரோபோக்கள் உள்ளிட்ட நவீன இயந்திரங்களை பயன்படுத்தப்படும் என்றும், இந்த தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

#LIVE மத்திய பட்ஜெட் 2019 : பங்குச்சந்தை சரிவு!
5 July 2019, 06:50 AM

- உலக வர்த்தகத்தில் இந்தியாவின் வளர்ச்சி அதிகரிப்பு!

#LIVE மத்திய பட்ஜெட் 2019 : பங்குச்சந்தை சரிவு!
5 July 2019, 06:47 AM

- நீர் மேலாண்மை துறையில் கவனம் செலுத்த திட்டம் - நிர்மலா சீதாராமன்

#LIVE மத்திய பட்ஜெட் 2019 : பங்குச்சந்தை சரிவு!
5 July 2019, 06:45 AM

- ரயில்வே துறை தனியார் மயமாக்க வேண்டிய அவசியம் என்ன? - நிர்மலா சீதாராமன் விளக்கம்

#LIVE மத்திய பட்ஜெட் 2019 : பங்குச்சந்தை சரிவு!
5 July 2019, 06:43 AM

- வாடகை கட்டுப்பாடு சிறப்பு சட்டம் செயல்படுத்த மத்திய அரசு திட்டம்!

#LIVE மத்திய பட்ஜெட் 2019 : பங்குச்சந்தை சரிவு!
5 July 2019, 06:41 AM

- சிறு,குறு வணிகர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் அறிவிப்பு!

#LIVE மத்திய பட்ஜெட் 2019 : பங்குச்சந்தை சரிவு!
5 July 2019, 06:39 AM

- இந்தியாவில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்

#LIVE மத்திய பட்ஜெட் 2019 : பங்குச்சந்தை சரிவு!
5 July 2019, 06:37 AM

- புதிய நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக தனியாக தொலைக்காட்சிகள் தொடங்கப்படும் - நிர்மலா சீதாராமப்

#LIVE மத்திய பட்ஜெட் 2019 : பங்குச்சந்தை சரிவு!
5 July 2019, 06:33 AM

- பொருளாதார வளர்ச்சி, தேசப்பாதுகாப்புக்கே முன்னுரிமை!

இந்திய பொருளாதாரம் தற்போது 2.7 ட்ரில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. இதனை 5 ட்ரில்லியன் டாலர்களாக்குவதே நமது இலக்கு. பொருளாதாரமும், தேசிய பாதுகாப்புக்கே அரசு முன்னுரிமை அளிக்கும் என மக்களவையில் நிர்மலா சீதாராமன் பேச்சு

5 July 2019, 06:24 AM

- வலுவான நிலையில் அந்நிய முதலீடு!

2018-19ம் நிதியாண்டில் அந்நிய முதலீடு வலுவான நிலையில் உள்ளது. வரும் நிதியாண்டுகளில் ஊடகத்துறை மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையில் அந்நிய முதலீட்ட அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்

காப்பீட்டு துறையில் 100 சதவிகிதம் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

5 July 2019, 06:12 AM

- மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர்!

2019-20ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் சபாநாயாகர் ஓம் பிர்லா முன்னிலை தாக்கல் செய்து வருகிறார் இரண்டாவது பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக லெதர் சூட்கேஸ் இல்லாமல் சிவப்பு நிற துணியால் மூடப்பட்ட லெட்ஜெரில் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

banner

Related Stories

Related Stories