இந்தியா

தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்பட்டது? 145 முன்னாள் அதிகாரிகள் கூட்டாக அறிக்கை!

மக்களவை தேர்தலில், தேர்தல் ஆணையம் பாரபட்சமாகவும், ஒருதலைபட்சமாகவும் செயல்பட்டதாக ஓய்வு பெற்ற அதிகாரிகள் 145-க்கும் மேற்பட்டோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்பட்டது? 145 முன்னாள் அதிகாரிகள் கூட்டாக அறிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க 2-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சி மட்டும் தனி பெரும்பான்மை பெற்றுள்ளது. தேர்தல் நடப்பதற்கு முன்பாகவே தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாகவும், பா.ஜ.க.வின் முறைகேடுகளை கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடப்பதாகவும் புகார்கள் அளித்தன. இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் இதனை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை என தொடர் குற்றச்சாட்டு அவ்வப்போது எழுந்து வருகிறது.

இந்நிலையில், தற்போது தேர்தல் முடிந்த நிலையில், மக்களவை தேர்தலின்போது தேர்தல் ஆணையம் செயல்பட்ட முறையை முன்னாள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், ஐ.ஆர்.எஸ், ஐ.எப்.எஸ் அதிகாரிகள் 65 பேர் உட்பட மொத்தம் 148 பேர் கடுமையாக விமர்சித்தும், கண்டித்தும் உள்ளனர். இது தொடர்பாக, முன்னாள் அதிகாரிகள் 145 பேர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த அறிக்கையை முன்னாள் ராணுவ தளபதிகள் அட்மிரல் ராம்தாஸ், அட்மிரல் விஷ்ணு பகவத் மற்றும் கல்வியாளர்கள் 83 பேர் ஆமோதித்துள்ளனர். இந்த கூட்டறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கும் கடிதமாக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "நாட்டில் கடந்த 30 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில், 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் முழு சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடக்கவில்லை என்பது போல் தெரிகிறது. மேலும் தேர்தல் தேதியை தாமதமாக அறிவித்தது, ஒரு கட்சிக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் செயல்பட்டதை தெளிவாக காட்டியது. பிரதமரின் நலத் திட்ட நிகழ்ச்சிகள் முடிவதற்காக தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் தாமதப்படுத்தியது. வரலாற்றில் மிக நீண்ட காலம் நடந்த தேர்தல் இதுதான். இது மத்தியில் ஆளும் கட்சிக்கு சாதகமாக அமைந்தது என்ற சந்தேகத்தை எழுப்பியது.

தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்பட்டது? 145 முன்னாள் அதிகாரிகள் கூட்டாக அறிக்கை!

மேற்கு வங்கத்தில் நடந்த கடைசி கட்டத் தேர்தலின்போது வன்முறை பரவியதால், பிரசாரத்துக்கு தடை விதித்ததுதான் தேர்தல் ஆணையத்தின் வலுவான நடவடிக்கை. அதுவும், பிரதமரின் பிரசாரம் முடிந்த பிறகுதான் அந்த தடை அமலுக்கு வந்தது. புல்வாமா, பாலகோட் தாக்குதல் பற்றி பிரதமர் தனது பிரசாரத்தில் பேசி தேசிய உணர்வுகளை தூண்டியது, அதிர்ச்சி அளித்த தேர்தல் நடத்தை விதிமுறை மீறலாகும்.

இதற்கு விளக்கம் கேட்டு, தேர்தல் ஆணையம் நோட்டீஸ் கூட அனுப்பவில்லை. பிரதமரின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்திய ஒடிசா தேர்தல் பார்வையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான நடவடிக்கை.

ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் முடிவுகளும், விவிபாட் இயந்திரங்களின் முடிவுகளும் ஒத்துப்போகாதது வாக்காளர்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இது குறித்து பல கட்சிகள் தெரிவித்த புகார்களுக்கு, தேர்தல் ஆணையம் ஆரம்பத்தில் இருந்தே சரியான விளக்கம் அளிக்கவில்லை.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தும்போது, ஒரு ஓட்டு குறைவாக இருந்தாலும், அது ஒட்டு மொத்த தேர்தலையே சந்தேகிக்க வைக்கும். பல மாநிலங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், இரவு நேரங்களில் இடம் மாற்றப்பட்டன. இதற்கு திருப்தியான விளக்கம் அளிக்கப்படவில்லை என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories