இந்தியா

பார்வையற்றோர் வசதிக்காக புதிய 20 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்படும் - பட்ஜெட்டில் தகவல்! 

2019-20ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பார்வையற்றோர் வசதிக்காக புதிய 20 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்படும் - பட்ஜெட்டில் தகவல்! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

17வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து பா.ஜ.க அரசு 2-வது முறையாக மத்தியில் ஆட்சியமைத்திருக்கிறது. நடப்பு நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார்.

அதில், புதிதாக 20 ரூபாய் நாணையங்கள் வெளியிடப்படும் எனவும், 1,2,5,10 ஆகியவையும் புதிதாக வெளியிடப்படும் எனவும் நிர்மாலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடியால் கடந்த மார்ச் 7-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நாணயங்கள் பார்வையற்றோர் எளிதில் உணரும் வகையில் வடிவமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories