இந்தியா

நாளை தாக்கலாகிறது மத்திய பட்ஜெட் : தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்படுமா?

நடப்பு ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

நாளை தாக்கலாகிறது மத்திய பட்ஜெட் : தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்படுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

17வது மக்களவையின் முதல் பட்ஜெட்டை நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்.

2019-20ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி மாதம், அப்போதைய நிதியமைச்சராக இருந்த பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால், 4 மாத செலவினங்களுக்கு ஒப்புதல் கேட்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், பா.ஜ.க. அரசு 2-வது முறையாக பொறுப்பேற்ற பிறகு முதல் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. சுதந்திர இந்தியாவில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பிறகு இரண்டாவது பெண்ணாக நிதியமைச்சர் பொறுப்பு வகித்திருக்கும் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

நாளை தாக்கலாகிறது மத்திய பட்ஜெட் : தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்படுமா?

புதிய பட்ஜெட் மூலம் தனிநபர் வருமான வரி உச்சவரம்பை 10 லட்சம் ரூபாய் வரை உயர்த்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். எனவே அது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இதேபோல், நாடு முழுவதும் வறட்சி நிலவும் நிலையில், விவசாயிகளுக்கு சலுகைகள், புதிய ரயில் தடங்கள் உள்ளிட்ட புதிய திட்டங்கள் இருக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கையை தலைமை பொருளாதார ஆலோசகர் இன்று மக்களவையில் தாக்கல் செய்கிறார்.

banner

Related Stories

Related Stories