இந்தியா

ஹோமியோபதி கல்விக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இடம்பெறவேண்டும்: திருச்சி சிவா

ஹோமியோபதி கல்வியை முறைப்படுத்துவதற்காக மத்திய அரசு அமைக்கும் ஆணையத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் இடம்பெற வேண்டும் என மாநிலங்களவை தி.மு.க குழு தலைவர் திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார்.

ஹோமியோபதி கல்விக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இடம்பெறவேண்டும்: திருச்சி சிவா
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஹோமியோபதி கல்வியை முறைப்படுத்துவதற்கான சட்டதிருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மீது நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய தி.மு.க உறுப்பினர் திருச்சி சிவா, ஹோமியோபதி கல்வி குறித்த நிதி ஆயோக்கின் பரிந்துரையை தான் வரவேற்பதாக தெரிவித்தார்.

முறைப்படுத்தப்பட்ட மருத்துவk கல்வி தொடர்பாக மத்திய அரசு திட்டமிட்டுள்ள ஆணையத்தை ஓராண்டுக்குள் அமைக்க வேண்டும் என வலியுறுத்திய திருச்சி சிவா, இந்த ஆணையத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களையும் இடம்பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அந்த அமைப்பில் இடம்பெறும் பட்சத்தில் ஜனநாயக செயல்பாட்டுக்கும் ஒத்துழைப்பாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories