இந்தியா

காலியாகவிருக்கும் 6 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் ஜூலை 18-ம் தேதி 6 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

காலியாகவிருக்கும் 6 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, அ.தி.மு.க-வின் டி.ரத்தினவேல், டாக்டர் வி.மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜுனன், டாக்டர் ஆர்.லட்சுமணன் ஆகியோரின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியோடு நிறைவடைகிறது. தி.மு.க-வின் கனிமொழி, மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து அவரது இடம் காலியாக இருக்கிறது.

தமிழகத்தில் ஜூலை 24-ம் தேதியோடு காலியாகும் ஆறு மாநிலங்களவை எம்.பி பதவிக்கு ஜூலை 18-ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் ஜூலை 1-ம் தேதி துவங்கி ஜூலை 8-ம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு பரிசீலனை ஜூலை 11-ம் தேதி எனவும், மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஜூலை 11 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 6 இடங்களுக்கு அதற்கும் மேற்பட்ட நபர்கள் போட்டியிடும் பட்சத்தில் ஜூலை 18-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வேரை வாக்குப்பதிவு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவுகள் அன்று மாலையே தெரியவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியாகவிருக்கும் 6 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு!

மாநிலங்களவை உறுப்பினர்களை அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துத் தேர்வு செய்வார்கள். தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க தலா 3 எம்.பி-களை போட்டியின்றித் தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளது.

banner

Related Stories

Related Stories