இந்தியா

‘ஜெய் ஸ்ரீ ராம்’ சொல்லாததால் ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டு இந்துத்வா கும்பல் அராஜகம்!

ஜெய் ஸ்ரீராம் எனக் கூற மறுத்ததால் மேற்கு வங்கத்தில் இஸ்லாமிய ஆசிரியர் ஒருவரை ஓடும் ரயில் இருந்து தள்ளிவிட்டு இந்துத்துவா கும்பல் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது.

‘ஜெய் ஸ்ரீ ராம்’  சொல்லாததால் ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டு இந்துத்வா கும்பல் அராஜகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க மீண்டும் ஆட்சிப்பொறுப்பை ஏற்றதில் இருந்து நாடுமுழுவதும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்துவா கும்பலின் அராஜகத்திற்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது. தினசரி, இஸ்லாமியர்கள் மீது தாக்குதலை நடத்தி பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில், மேற்கு வங்க மாநிலத்தில் ஹஃபீஸ் முகமது ஷாருக் ஹல்தார் (26) என்ற இஸ்லாமிய ஆசிரியர் ஒருவர் தெற்கு 24 பாரகனாஸில் இருந்து ஹூக்ளி பகுதிக்கு ரயிலில் சென்றபோது, ”ஜெய் ஸ்ரீராம்” என கூற வற்புறுத்திய மதவாதக் கும்பலின் இசைவுக்கு மறுத்ததால் ஓடும் ரயில் இருந்து கீழே தள்ளப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ஹூக்ளி செல்வதற்காக ரயிலில் சென்றபோது, கும்பல் ஒன்று ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டபடி ரயிலில் ஏறினர். அப்போது, என்னையும் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட வற்புறுத்தினர். ஆனால், நான் மறுத்ததால் என்னை தாக்கினர். அப்போது மதவாதக் கும்பலிடம் இருந்து என்னை காப்பாற்ற எவரும் எத்தனிக்கவில்லை என வேதனையுடன் ஹல்தார் தெரிவித்தார்.

‘ஜெய் ஸ்ரீ ராம்’  சொல்லாததால் ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டு இந்துத்வா கும்பல் அராஜகம்!

மேலும் இச்சம்பவம், தக்குரியாவுக்கும் பார்க் சர்க்கஸ் நிலையத்துக்கும் இடையே நடந்தது. பின்னர், பார்க் சர்க்கஸ் நிலையம் வந்த போது ரயில் நிறுத்தப்படுவதற்கு முன்பே என்னைக் கீழே தள்ளிவிட்டனர். இதில் சிறிய காயங்களுடன் தப்பித்துவிட்டதாகவும் என்றும், இது தொடர்பாக ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதனையடுத்து பேசிய ரயில்வே போலீசார், பயணத்தின் போது ஏற்பட்ட கைகலப்பில் ஹல்தாருக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் சித்ரரஞ்சன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறினார். மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

banner

Related Stories

Related Stories