இந்தியா

யோகாவை மதத்துடன் தொடர்புப்படுத்த கூடாது - கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு !

யோகாசனத்திற்கும் மதத்திற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. யோகாசனத்தை மதத்துடன் தொடர்புபடுத்த கூடாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

யோகாவை மதத்துடன் தொடர்புப்படுத்த கூடாது - கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நேற்று நாடு முழுவதும் யோகாசன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள், இராணுவ அதிகாரிகள், அரசியல் கட்சியினர் என பலர் கலந்து கொண்டு யோகாசனம் பயிற்சிகளை மேற்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக திருவனந்தபுரத்தில் ஆளுநர் மாளிகையிலும் திருவனந்தபுரம் சென்ட்ரல் மைதானத்திலும் நடைபெற்றது. மைதானத்தில் நடைபெற்ற யோகாசனம் நிகழ்ச்சியில் முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொண்டார்.

பின்னர் அந்த நிகழ்ச்சியில் பினராயி விஜயன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது," கேரளாவில் மக்களிடையே யோகாசனத்தை கொண்டு செல்வதில் மாநில அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, குறிப்பாக பள்ளிகளில் மாணவர்களுக்கு யோசனை பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிட்டு பணிகளும் நடைபெறுகிறது.

சிலர் யோகாசனத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர். யோகாசனத்தை குறிப்பிட்ட மதத்தோடு தொடர்ப்பு படுத்த முயல்கிறார்கள். இந்த நடவடிக்கை மிகவும் மோசமானது, தவறானது. இந்த யோகாசனத்திற்கும் மதத்திற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. யோகாசனத்தை மதத்துடன் தொடர்பு படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

யோகாசன பயிற்சிகள் மேற்கொள்ளவதால் நமது உடலை வலுவாகும். பல்வேறு நோய்கள் குணமாகிய வாய்ப்பு உள்ளது. மன நலனை பாதுகாக்கவும் யோகாசனம் உதவுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண், பெண் வித்தியாசம் இன்றி அனைவரும் யோகாசனம் செய்யவது நல்லது என அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories