இந்தியா

நாடாளுமன்ற காவிகள் தந்த ஊக்கம்- 'ஜெய்ஸ்ரீராம்' கோஷமிடச் சொல்லி இஸ்லாமியர் மீது தாக்குதல்!

டெல்லி மற்றும் அசாமில் ஜெய் ஸ்ரீராம் எனவும், பாரத் மாதாகி ஜெ எனவும் கோஷமிடச் சொல்லி இஸ்லாமியர்கள் இருவர் மீது இந்துத்துவா கும்பல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

மவுலானா மொமின் (பாதிக்கப்பட்டவர்)
மவுலானா மொமின் (பாதிக்கப்பட்டவர்)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாஜக தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவியேற்றதும் நாட்டில் உள்ள சிறுபான்மையினர்களும், ஒடுக்கப்பட்ட மக்களும் பெரிதும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

பிரதமராக மோடி பதவியேற்ற சில நாட்களிலேயே அடுத்தடுத்து நாட்டின் 5 வெவ்வேறு பகுதிகளில் ஜெய் ஸ்ரீராம் என சொல்லச் சொல்லி இந்துத்துவா கும்பலும், ஆர்.எஸ்.எஸும் சிறுபான்மையினர்கள் மீது வன்முறையை கையாண்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, டெல்லியின் ரோகிணி செக்டார் பகுதில் குர்ரான் பயிற்சி அளித்துவரும் மவுலானா மொமின் என்ற இஸ்லாமியரை ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடக் கூறி மிரட்டியுள்ளனர். அவர் மறுத்ததால் இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த மூன்று பேர் கடுமையாக தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த மவுலானாவை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

நாடாளுமன்ற காவிகள் தந்த ஊக்கம்- 'ஜெய்ஸ்ரீராம்' கோஷமிடச் சொல்லி இஸ்லாமியர் மீது தாக்குதல்!

இச்சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டத்தை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்

அதேப்போல், அசாமில் பர்பேடா என்ற பகுதியில் ரிக்‌ஷாவில் சென்றுக் கொண்டிருந்த இஸ்லாமியர்களை வழிமறித்து ஜெய் ஸ்ரீராம் என கோஷமிடச் சொல்லி இந்துத்துவா கும்பல் கட்டாயப்படுத்தி அவர்களை கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இதுபோன்று, இந்து மதக் கோட்பாடுகளை முன்வைத்து நாடு முழுவதும் உள்ள சிறுபான்மையினர்கள் மீது பல்வேறு வகையில் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் இஸ்லாமியர்கள் அச்சத்துடனேயே வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் எழுப்பி மதவாத அரசியல் செய்யும் இந்த கொடூரர்கள்ம் நாடாளுமன்றத்தில் காவி உடையில் அமர்ந்திரு கும்பல்களின் ஒரு பிரதியே. ஐதராபாத் எம்.பி. ஓவைசி மக்களவையில் பதவியேற்க வரும்போது அவருக்கு எதிராக இதே கோஷத்தை எழுப்பினர், அந்த மதவாத சவ்கிதார்கள். அது நாடாளுமன்றம் என்பதால் ஒவைசிக்கு வேறு எதுவும் நடக்கவில்லை. அவ்வளவே வித்தியாசம்.

மதச்சார்பின்மை என்ற இந்திய இறையான்மையை பேணிக் காக்க வேண்டியவர்கள், ஒரே மதம் என்பதை சாதிக்க நாடாளுமன்றம் சென்றுள்ளனர். மதம் கொண்டு மனிதர்களை வேண்டுமானால் சாய்க்கலாம். ஆனால் இவர்களால் கருத்தியல்களை ஒருபோதும் வீழ்த்த முடியாது என்பதே நிதர்சனம்.

banner

Related Stories

Related Stories