இந்தியா

பீகாரில் குழந்தைகளை தாக்கும் மூளை காய்ச்சல்: மூன்று நாளில் 66 குழந்தைகள் பரிதாப பலி!

பீகாரில் கடந்த மூன்று நாட்களில் 66 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பீகாரில் குழந்தைகளை தாக்கும் மூளை காய்ச்சல்: மூன்று நாளில் 66 குழந்தைகள் பரிதாப பலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பீகாரில் என்செபாலிடிஸ் என்ற ஒருவித மூளைக்காய்ச்சலால் இதுவரை 66 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும், இந்தக் காய்ச்சல் வடக்கு பீகாரின் முசாஃபர்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளை அதிகம் பாதித்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

என்செபாலிடிஸ் நோயானது மூளையின் செயல்பாட்டைத் தாக்கி குழப்பம், கோமா, வலிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தி உயிரிழப்பையும் ஏற்படுத்தக்கூடும் ஒருவித காய்ச்சல். குழந்தைகளின் தொடர் உயிரிழப்பால் பீகார் மாநில மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இதுவரையிலும் முசாபர்பூர் மாவட்டத்தில் மூளை காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. கிருஷ்ணா மருத்துவமனையில் 55 குழந்தைகளும், கெஜ்ரிவால் மருத்துவமனையில் 11 குழந்தைகளும் என மொத்தம் 66 பேர் பலியாகி உள்ளனர் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணம் என்செபாலிடிஸ் அல்ல, ஹைப்போக்ளைசீமியா என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் வெறும் வயிற்றோடு தூங்குவதால் உடலின் வெப்பநிலை அதிகரித்து, நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்பட்டு இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு வெகுவாகக் குறைவதே உயிரிழப்புக்குக் காரணம் என மருத்துவக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories