இந்தியா

மாயமான விமானம் : 13 பேரும் உயிரிழந்ததாக விமானப்படை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

காணாமல் போன ஏஎன்-32 ரக விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.

மாயமான விமானம் : 13 பேரும் உயிரிழந்ததாக விமானப்படை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஏஎன்-32 ரக விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்திய விமானப்படையின் ஏஎன்-32 விமானம் கடந்த ஜூன் 3 -ம் தேதி மதியம் 12.25 மணிக்கு அசாம் மாநிலம் ஜோர்ஹட்டிலிருந்து அருணாச்சல பிரதேசத்தின் மெச்சுக்கா பகுதிக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் விமானி உள்ளிட்ட 6 அதிகாரிகள், 5 வீரர்கள் என 13 பேர் பயணம் செய்தனர்.

பிற்பகல் 1 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது ஏஎன்-32 விமானம். இதையடுத்து இந்திய விமானப்படையின் போர் விமானங்கள், இந்திய ராணுவ ஹெலிகாப்டர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டன.

விமானம் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ. 5 லட்சம் சன்மானம் அளிப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரு வாரம் தேடுதல் வேட்டைக்குப் பிறகு விமானத்தின் பாகங்கள் அருணாசல பிரதேசத்தின் லிபோ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், தேடுதல் வேட்டை முழுமையாக முடிந்தநிலையில், ஏஎன்-32 விமானத்தில் பயணித்த விங் கமாண்டர் சார்லஸ் உள்ளிட்ட 13 பேரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பயணித்தவர்களின் குடும்பத்திற்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories