இந்தியா

நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவுவதால் ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு - ரிசர்வ் வங்கி 

இந்தியாவின் பொருளாதா வளர்ச்சி மந்த நிலையில் இருப்பதால்தான் தொடர்ந்து ரெப்போ ரேட் வட்டியைக் குறைத்துக் கொண்டிருப்பதாக குறிப்பிடுகிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவுவதால் ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு - ரிசர்வ் வங்கி 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மும்பையில் கடந்த மூன்று நாட்களாக ரிசர்வ் வங்கி கவர்னர் தலைமையில் மத்திய ரிசர்வ் வங்கியின் (RBI) பணக் கொள்கை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதத்திலிருந்து 0.25 சதவீதம் குறைத்து 5.75 சதவீதமாக அறிவிக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் 2019-ல் 0.25 சதவிகிதம் குறைத்து ரெப்போ வட்டி விகிதத்தை 6.00 சதவிகிதமாக நிர்ணயித்தது ரிசர்வ் வங்கி. இப்போது மேலும் 0.25 சதவிகிதம் குறைத்து ரெப்போ வட்டி விகிதத்தை 5.75 சதவிகிதமாக நிர்ணயித்திருக்கிறது ஆர்.பி.ஐ.

ரெப்போ வட்டி விகிதம் என்பது வங்கிகள், இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து பெற்ற கடனை திருப்பி செலுத்துவதற்கான வட்டி விகிதம் ஆகும். இந்த ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் வங்கிகளுக்கு ஏற்படும் செலவுகள் குறைந்து வாடிக்கையாளர்களின் மீதான கடன் சுமை குறைய வாய்ப்புள்ளது. ஆர்.பி.ஐ அறிவிப்பை அடுத்து, வங்கி நிறுவனங்கள் விரைவில் தங்களது கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை குறைத்து அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவுவதால் ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு - ரிசர்வ் வங்கி 

சக்தி காந்த தாஸ் ரிசர்வ் கவர்னராக பொறுப்பேற்ற பின் தொடர்ந்து பிப்ரவரி 2019, ஏப்ரல் 2019, ஜூன் 2019 என மூன்று பணக் கொள்கை முடிவுக் கூட்டங்களிலும் ரெபோ வட்டி விகிதத்தைத் தலா 0.25 சதவிகிதம் என இதுவரை 0.75 சதவிகிதம் குறைத்து இருக்கிறார் சக்தி காந்த தாஸ்.

இந்தியாவின் பொருளாதா வளர்ச்சி மந்த நிலையில் தவிப்பதனால் தான் தொடர்ந்து ரெப்போ ரேட் வட்டியைக் குறைத்துக் கொண்டிருப்பதாக குறிப்பிடுகிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

ரெப்போ வட்டி விகிதம் 5.75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 5.50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் என்பது வங்கிகளிடமிருந்து ஆர்.பிஐ வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கான வட்டி விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories