இந்தியா

“பா.ஜ.க ஆட்சி விரைவில் வெளியேற்றப்படும்” - மம்தா பானர்ஜி ஆவேசப் பேச்சு!

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற ரமலான் விழா பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க-வுக்கு எச்சரிக்கை விடுத்து மம்தா பானர்ஜி ஆவேசமாகப் பேசியுள்ளார்.

“பா.ஜ.க ஆட்சி விரைவில் வெளியேற்றப்படும்” - மம்தா பானர்ஜி ஆவேசப் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் இஸ்லாமியர்கள் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்றிருந்தார் முதலமைச்சர் மம்தா பானர்ஜி.

அப்போது பேசுகையில், சூரியன் உதிக்கும்போது, அதன் ஒளிக்கதிர்கள் உஷ்ணமானதாகவே இருக்கும். சிறிது நேரத்தில் மங்கலாவது வழக்கம். அதுபோல தான், நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ.க பெற்றிருக்கக்கூடிய வெற்றி. மோசடி செய்து மீண்டும் ஆட்சி அமைத்துள்ளவர்கள் வெகு விரைவில் ஆட்சியில் இருந்து அழிக்கப்படுவார்கள் என ஆவேசமாக பேசியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், இஸ்லாமியர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் என அனைத்து மதத்தினரும் தியாகம், ஒற்றுமை, விட்டுக்கொடுத்தல், அன்பு என அனைத்து வகையிலும் ஒன்றிணைந்துள்ளனர். இதுவே நம் இந்தியா. மதத்தை ஆயுதமாக ஏந்தி எவரெல்லாம் மோத முற்படுகிறார்களோ அவர்கள் துவம்சம் செய்யப்படுவார்கள் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories