இந்தியா

புதிய அமைச்சரவை சகாக்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை! 

மோடி தலைமையில் புதிய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

17வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, பிரதமர் மோடியும் புதிய அமைச்சரவையும் நேற்று டெல்லியில் பதவியேற்றனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அனைவருக்கும் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது என தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இதில், 17வது மக்களவையின் முதல் கூட்டம், புதிய கொள்கைகள், திட்டங்கள் மற்றும் பட்ஜெட் தாக்கல் போன்றவைக் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories