இந்தியா

ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஆந்திரா சென்றார் மு.க.ஸ்டாலின்!

ஆந்திர மாநில முதலமைச்சராக ஜெகன்மோகன் பதவியேற்க உள்ள விழாவில் கலந்துகொள்வதற்காக ஆந்திராவுக்கு சென்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஆந்திரா சென்றார் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டப்பேரவைத் தேர்தலும் நடத்தப்பட்டது. இதில், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 175 தொகுதிகளில் 151 தொகுதிகளில் வென்றதை அடுத்து ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையை பெற்றது.

எனவே, ஆந்திராவின் விஜயவாடா அருகே உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் இன்று முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி. மேலும், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை வருகிற ஜூன் 7ல் பதவியேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஜெகன்மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் விஜயவாடாவுக்கு சென்றார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்

banner

Related Stories

Related Stories