இந்தியா

பர்தா அணிந்து வந்த முஸ்லிம் மாணவியிடம் ‘ஜெய் ஸ்ரீராம்’ என கத்தி அச்சுறுத்திய இளைஞர்கள்!

மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு பெங்கால் மருத்துவ கல்லூரி வளாகத்தில் ஹிஜாப் உடையணிந்த முஸ்லீம் பெண் ஒருவரை நோக்கி 10-12 இளைஞர்கள் குழுவாக சென்று ஜெய் ஸ்ரீ ராம் என்று கூச்சலிட்டு தொந்தரவு செய்துள்ளனர்.

பர்தா அணிந்து வந்த முஸ்லிம் மாணவியிடம் ‘ஜெய் ஸ்ரீராம்’ என கத்தி அச்சுறுத்திய இளைஞர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு பெங்கால் மருத்துவ கல்லூரி வளாகத்தில் ஹிஜாப் உடையணிந்த முஸ்லிம் பெண் ஒருவரை நோக்கி 10-12 இளைஞர்கள் குழுவாக சென்று ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூச்சலிட்டு தொந்தரவு செய்துள்ளனர்.

இது குறித்து அந்த பெண் கூறியதாவது, “நானும் எனது தோழியும் இரவு உணவு முடித்துவிட்டு 10 மணிக்கு கேண்டீனிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தோம். அப்போது அங்கிருந்த ஆண்கள் எங்களை நோக்கி ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூச்சலிட ஆரம்பித்தனர். உடனே நாங்கள் அந்த இடத்திலிருந்து ஓடிவிட்டோம். எங்கள் கல்லூரியில் இதற்கு முன்பு இதுபோன்று நடந்ததில்லை. நான் ஒரு ஹிஜாப் அணியும் முஸ்லிம். இதுபோன்ற தொந்தரவை என் வாழ்க்கையில் இதுவரை சந்தித்ததில்லை” என்று அச்ச உணர்வோடு பேசுகிறார்.

மாட்டுக்கறி வைத்திருந்ததாக கட்டி வைத்து அடிப்பது, குல்லா அணிந்திருந்தால் தாக்குவது, ‘முஸ்லிம் என்றால் பாகிஸ்தானுக்கு போ’ என்று அச்சுறுத்துவது என, பா.ஜ.க வெற்றி பெற்ற 6 நாட்களுக்குள் சிறுபான்மையினர் மீது நடைபெறும் ஆறாவது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories