இந்தியா

ராகுல் ராஜினாமா உண்மையா? விளக்கம் அளித்த காங்கிரஸ்!

ராகுல் காந்தி பதவி விலகுவதாகவும் கட்சியின் காரிய கமிட்டியிடம் விருப்பம் தெரிவித்ததாகவும் வெளிவந்த செய்து உண்மையல்ல என காங்கிரஸ் தற்பொழுது விளக்கம் அளித்துள்ளது.

ராகுல் ராஜினாமா உண்மையா? விளக்கம் அளித்த காங்கிரஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் நேற்று முன் தினம் வெளிவந்தன. பா.ஜ.க கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து அக்கட்சியே மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்க உள்ளது.

இதில், காங்கிரஸ் கட்சியால் 52 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. தமிழகத்தில் தி.மு.க உடனான கூட்டணியில் தங்களது வெற்றியை நிலை நிறுத்திக்கொண்டுள்ளது.

மேலும் ராகுல் காந்தி தான் போட்டியிட்ட அமேதி தொகுதியில் ஸ்மிருதி இராணியிடம் தோல்வியடைந்தார். வயநாடு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிப்பதற்காக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மூத்தத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் உ.பி. பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மற்றும் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், அகமது பாட்டீல் ஆகியோர் பங்கேற்றனர்.

மக்களவை தேர்தலில் தொடர்ந்து 2-வது முறையாக கட்சி தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தோல்விக்கு பொறுப்பேற்று தனது கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகுவதாகவும் கட்சியின் காரிய கமிட்டியிடம் விருப்பம் தெரிவித்ததாகவும், அதனை ஏற்க காங்கிரஸ் காரிய கமிட்டி மறுத்துவிட்டதாகவும் ஊடங்களில் செய்தி வெளியானது. ஆனால், அதனை காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரந்தீப் சிங் கூறுகையில், ” ராகுல் காந்தி பதவியில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுக்கவில்லை. அவர் சோனியா காந்தியிடம் கொடுத்தாகவும் செய்திகள் வெளிவருகின்றன. அந்த தகவல்கள் உண்மையில்லை” என அவர் தெரிவித்தார்.

மேலும் சில ஊடகங்களில் ராகுல் ராஜினாமா என பொய்யான செய்தி பரப்பப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

banner

Related Stories

Related Stories