இந்தியா

மாட்டிறைச்சி வைத்திருந்ததாக இஸ்லாமிய இளைஞர்கள் மீது  இந்துத்வா கும்பல் கொலைவெறி தாக்குதல்!

பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து மீண்டும் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் தலைதூக்கியுள்ளன.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பா.ஜ.க ஆட்சியில் உணவுக்காக மாட்டை வெட்ட தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்துத்வா கும்பல் மாட்டுக்கறி உண்பவர்களைத் தாக்கி வருகிறது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து மீண்டும் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் தலைதூக்கியுள்ளன.

மத்திய பிரதேச மாநிலம் சியோனி நகரில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக இந்துத்வா கும்பல் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. ஆட்டோவில் சென்ற இரண்டு இஸ்லாமிய இளைஞர்கள் மற்றும் ஒரு பெண்ணை வழிமறித்து மாட்டிறைச்சியைப் பதுக்கியதாக சரமாரித் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடக் கோரி மூன்று பேரையும் ‘பசுக்காவல் குண்டர்கள்’ கட்டைகளால் தாக்கியுள்ளனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தை வீடியோவும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இஸ்லாமிய இளைஞர்களைத் தாக்கியதற்கு பல அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இதையடுத்து, கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட ராம் சேனாவின் சுபம் பாகேல் உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ளது காவல்துறை.

banner

Related Stories

Related Stories