இந்தியா

மோடி கலந்துகொண்ட 'வந்தே பாரத்' ரயிலின் தொடக்க ஓட்ட விழாவுக்கு ரூ.52 லட்சம் செலவு

பிரதமர் மோடி தொடங்கி வைத்த டெல்லி - வாரணாசி வந்தே பாரத் ரயிலின் தொடக்க ஓட்ட விழாவுக்கு 52 லட்சம் செலவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மோடி கலந்துகொண்ட 'வந்தே பாரத்' ரயிலின் தொடக்க ஓட்ட விழாவுக்கு  ரூ.52 லட்சம் செலவு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

டெல்லி - வாரணாசி இடையே இயங்கும் வந்தே பாரத் ரயிலின் தொடக்க ஓட்டத்தை மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த ரயில் டெல்லியிலிருந்து வாரணாசி வரை இயக்கப்படுகிறது. இதற்காக சிறப்பான முறையில் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 45 மத்தியப்படை விரர்கள் பலியான மறுநாள் காலை இந்த தொடக்க விழா நிகழ்ச்சி நடந்தது, பெரும் சர்ச்சையை கிளப்பியது. முதல் பயணத்தில் வாரணாசி சென்று, பின் திரும்பும் போது வந்தே பாரத் ரயில் பழுதானது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ரயிலின் முதல் ஓட்ட விழாவுக்கு ரூ.52 லட்சம் செலவிடப்பட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. விழா பந்தல் அமைத்தல், எலக்ரிக்கல், சிக்னல் மற்றும் தொலை தொடர்பு உபகரணங்களுக்காக இந்த 52 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மோடி கலந்துகொண்ட 'வந்தே பாரத்' ரயிலின் தொடக்க ஓட்ட விழாவுக்கு  ரூ.52 லட்சம் செலவு

விஷ்வாஸ் தாஸ் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் எழுப்பபட்ட இந்த கேள்விக்கு வடக்கு ரயில்வே நிர்வாகம் பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories