இந்தியா

தொடர்ந்து தேர்தல் விதிமீறலில் ஈடுபடும் மோடி : திரிணாமுல் காங்கிரஸ் புகார்

தேர்தல் பிரசாரங்கள் முடிந்த கையோடு, பிரதமர் மோடி கேதார்நாத் சென்றிருப்பது நடத்தை விதிமீறல் என திரிணாமுல் காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து தேர்தல் விதிமீறலில் ஈடுபடும் மோடி : திரிணாமுல் காங்கிரஸ் புகார்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசார வேளைகள் நாடு முழுவதும் முடிவடைந்து இன்று அதற்கான கடைசிகட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் பனிமலை கோயிலுக்கு சென்றுள்ளார். கோயிலில் வழிபட்ட பிறகு அங்குள்ள குகையில் தியானம் செய்தார். இது நாடுமுழுவதும் பெரும் பேச்சுவார்த்தைக்கு வழிவகுத்தது.

தொடர்ந்து தேர்தல் விதிமீறலில் ஈடுபடும் மோடி : திரிணாமுல் காங்கிரஸ் புகார்

இவ்வாறு இருக்கையில், 18 மணிநேரத்துக்கு பிறகு கேதார்நாத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார் பிரதமர் மோடி. அப்போது பேசிய அவர், தனக்காக இங்கு வரவில்லை என்றும், நாட்டு மக்களின் நலனுக்காக வந்திருக்கிறேன் என்றுக் கூறினார். மேலும், கேதார்நாத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றியுள்ளேன் என தன் பெருமைகளையும் கூறியுள்ளார்.

தொடர்ந்து தேர்தல் விதிமீறலில் ஈடுபடும் மோடி : திரிணாமுல் காங்கிரஸ் புகார்

மோடியின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் கூறியுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் பேசுவது போன்று செய்தியாளர்களிடம் மோடி பேசியிருப்பது அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமீறல். நாடுமுழுவதும் தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில் பிரதமர் மோடியின் கேதார்நாத் சுற்றுப்பயணம், தியானம் எல்லாம் சட்டத்துக்கு விரோதமானது என குற்றஞ்சாட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories