இந்தியா

என்ன தியானம் செய்தாலும் மோடியை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது - திரிணாமுல் வேட்பாளர்

இனவாத கட்சியான பாஜகவை வெளியேற்ற மக்கள் முடிவெடுத்துவிட்டனர் என டைமண்ட் துறைமுகத் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் அபிஷேக் பானர்ஜி பேசியுள்ளார்.

என்ன தியானம் செய்தாலும் மோடியை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது - திரிணாமுல் வேட்பாளர்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கடவுள் நினைத்தால் கூட மோடி தோற்பதை மாற்ற முடியாது என மேற்கு வங்க மாநிலத்தின் டைமண்ட் துறைமுகத் தொகுதி வேட்பாளர் அபிஷேக் பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

இனவாத கட்சியாக உள்ள பா.ஜ.கவை வெளியேற்ற வேண்டும் என்று மக்களே முடிவெடுத்துள்ளனர் என அபிஷேக் பேசியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த தேர்தலில் கடவுளே நினைத்தால் கூட மோடியை தோல்வியில் இருந்து காப்பாற்ற முடியாது. எனவே அவர் தியானம் செய்துவிட்டு போகட்டும் என கிண்டல் செய்துள்ளார் அபிஷேக்.

கடந்த மே 15ம் தேதி அன்று, டைமண்ட் துறைமுகத்தில் நடந்த பிரசாரத்தின் போது, தன்னை பற்றி அவதூறாக பேசிய பிரதமர் மோடிக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகவும் அபிஷேக் தெரிவித்துள்ளார்.

உரிய ஆதாரமில்லாமல் என்மீது மோடி குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். இது குறித்து 36 மணிநேரத்திற்குள் அவர் மன்னிப்பு கேட்காவிட்டால், மோடி மீது அவதூறு வழக்கு தொடர்வேன் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories