இந்தியா

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் ராணுவ வீரர் வழக்கு!

வாரணாசி தொகுதியில் மோடிக்கு எதிராக கடைசி நேரத்தில் சமாஜ்வாடி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் முன்னாள் ராணுவ வீரர் தேஜ் பகதூர் யாதவ் 

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் ராணுவ வீரர் வழக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

எல்லையில் ராணுவ வீரர்களுக்கு முறையான உணவு வழங்கப்படவில்லை என்றும், சுகாதாரமற்ற உணவு என குறை கூறி முகநூலில் வீடியோ வெளியிட்டதாக பாதுகாப்பு படை பணியில் இருந்து கடந்த 2017ம் ஆண்டு பாஜக அரசால் நீக்கப்பட்டார் தேஜ் பகதூர் யாதவ்.

இந்நிலையில், மே 19 அன்று வாரணாசியில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்திருந்தார் தேஜ் பகதூர். இறுதியில் உத்தரபிரதேச மாநிலத்தின் பிரதான கட்சியான சமாஜ்வாடி தனது வேட்பாளரை விலக்கிக்கொண்டு தேஜ் பகதூரை அக்கட்சியின் வேட்பாளராக அறிவித்தது.

இதனையடுத்து, வாரணாசியில் போட்டிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த தேஜ் பகதூரில் மனுவில் ஒழுங்கான விவரங்கள் இல்லை எனக் கூறி தேர்தல் அதிகாரி நிராகரித்துள்ளார்.

பின்னர், பேட்டியளித்த தேஜ் பகதூர், தேர்தல் ஆணையம் திட்டமிட்டே தன்னுடைய வேட்புமனுவை நிராகரித்திருப்பதாக குற்றஞ்சாட்டினார். ஆகையால் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக வழக்கு தொடர்வேன் என கூறினார்.

அதேபோல், தனது வேட்புமனுவை நிராகரித்த தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் பாதுகாப்பு படை வீரர் தேஜ் பகதூர் வழக்கு தொடந்துள்ளார்.

banner

Related Stories

Related Stories