நான்காம் கட்டத் தேர்தல் நடைபெற்ற உத்தர பிரதேச மாநிலம் மஹோபா மக்களவைத் தொகுதியில் ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் 15 மணி நேரங்களுக்கு மாயமானதால் அங்கு மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மகோபா மாவட்டத்தில் உள்ள நோகான் பத்னா கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வாக்குப்பதிவுக்குப் பின்னர் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குக் கொண்டு செல்லும் வழியில் மாயமானது.
இதையடுத்து, 15 மணி நேரம் கழித்து அந்த வாக்குப்பதிவு இயந்திரம் முத்திரை வைக்கப்பட்ட நிலையிலேயே பேருந்து நிலையத்தின் காத்திருப்பு அறையில் மீட்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் விசாரிக்கப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கில், 4 தேர்தல் பணியாளர்கள் மற்றும் ஐந்து பாதுகாப்புப் படையினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். ஐந்தாவது கட்டத் தேர்தல் நடைபெறும் மே 6ம் தேதி அங்கு மீண்டும் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.