இந்தியா

சி.பி.எஸ்.இ. +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் ஏப்.,4ம் தேதி நிறைவடைந்தது.

சி.பி.எஸ்.இ. +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2018-19ம் ஆண்டுக்கான சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்கி ஏப்.,4ல் முடிவடைந்து. நாடுமுழுவதும் சுமார் 31 லட்சம் மாணவ மாணவிகள் பொதுத்தேர்வை எழுதினர்.

வெளிநாடுகளில் 78 தேர்வு மையங்கள் உட்பட 4,974 தேர்வு மையங்களில் 18.1 லட்சம் மாணவர்களும், 12.9 லட்சம் மாணவிகளும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர்.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று வெளியாகியுள்ளது. இது மாணாக்கர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தேர்வு முடிவுகளை https://results.gov.in/nicresults/index.aspx , http://delhi.indiaresults.com/ , http://cbse.examresults.net/ ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தங்கள் பதிவு எண்ணை அளித்து அறிந்துகொள்ளலாம்.

banner

Related Stories

Related Stories