இந்தியா

“வேலைவாய்ப்புகளைத் திருடிவிட்டார் சௌகிதார்” - ராகுல் காந்தி பேச்சு!

“சௌகிதார் மோடி, ரேபரேலி மற்றும் அமேதியிலிருந்து வேலைவாய்ப்புகளைத் திருடிவிட்டார்.” எனப்  பேசியுள்ளார் காங். தலைவர் ராகுல் காந்தி.

“வேலைவாய்ப்புகளைத் திருடிவிட்டார் சௌகிதார்” - ராகுல் காந்தி பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி, அமேதி தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “பா.ஜ.க கொண்டுவந்த ஜி.எஸ்.டி போல ஒரு முட்டாள்தனத்தை 70 ஆண்டுகால ஆட்சியில் யாரும் செய்ததில்லை” எனப் பேசியுள்ளார்.

மேலும் அவர் பேசியதாவது, ‘சௌகிதார், ரேபரேலி மற்றும் அமேதியிலிருந்து வேலைவாய்ப்புகளைத் திருடிவிட்டார். அரசுத் துறைகளில் சுமார் 22 லட்சம் வேலைவாய்ப்புகள் காலியாக இருக்கின்றன. அதை மோடி ஒருபோதும் நிரப்ப மாட்டார். அவரது நண்பர்களுக்கு உதவி செய்வதற்கே அவருக்கு நேரம் சரியாக இருக்கிறது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஒரே ஆண்டில் காலி பணியிடங்களை நிரப்புவோம். பஞ்சாயத்துகளில் இருக்கும் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு வழங்குவோம். ஒவ்வொருவருக்கும் 15 லட்ச ரூபாய் பணம் கொடுப்பது என்பது சாத்தியமற்றது. வறுமைக்கோட்டிற்குக் கீழ் இருக்கும் ஏழைக் குடும்பங்களுக்கு ‘நியாய்’ திட்டம் மூலம் 72,000 வீதம் 5 ஆண்டுகளுக்குக் கொடுப்பது என்பது சாத்தியமே. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், அதைச் செய்து காட்டும்.

மோடி பணமதிப்பிழப்பு என்ற பெயரில் மக்களை ஏமாற்றி, பொய் சொல்லி, வரிசையில் நிற்கவைத்தார். ஊழலுக்கு எதிரான, கருப்புப் பணத்துக்கு எதிரான போர் என்று அதை பிரகடனப்படுத்தினார். ஆனால், மொத்த நாட்டையும் ஏமாற்றி, மக்கள் பையிலிருந்து பணத்தை எடுத்து, அம்பானியிடம் கொடுத்துவிட்டார்” எனப் பேசினார் ராகுல் காந்தி.

banner

Related Stories

Related Stories