இந்தியா

உண்மை தெரியாமல் பிரதமர் பேசுகிறார் - பினராயி விஜயன் தாக்கு!

வாரணாசியில் செய்தியாளர்களை சந்தித்த மோடி, கேரளாவில் பா.ஜ.க தொண்டர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றார். இதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பதிலடி கொடுத்தார். 

உண்மை தெரியாமல் பிரதமர் பேசுகிறார் -  பினராயி விஜயன் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்த பின்பு பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது கேரளாவில் பாரதிய ஜனதா தொண்டர்களுக்கு பாதுகாப்பு இல்லை. வீட்டை விட்டு வெளியே சென்றால் எந்த தாக்குதலுக்கும் ஆளாகாமல் அவர்கள் வீடு திரும்புவார்களா என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் உத்தரபிரதேசத்தில் அப்படிப்பட்ட நிலை இல்லை என்று கூறி இருந்தார்.

இது தொடர்பாக கேரள முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான பினராயி விஜயன்,பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அதில், “கேரளாவில் பாரதிய ஜனதா தொண்டர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை பிரதமர் மோடி எந்த அடிப்படையில் கூறினார் என்பதை தெரிவிக்க வேண்டும். பிரதமரிடம் இருந்து இத்தகைய கருத்தை எதிர்பார்க்கவில்லை.

கேரளாவை பற்றி அவருக்கு தெரியாமல் இருந்தால் மத்திய அரசின் குற்ற ஆவண காப்பக பதிவேடுகளை பார்வையிட்டு உண்மையைத் தெரிந்து கொள்ளலாம். மத்திய அரசின் ஏஜென்சிகள் வெளியிட்ட தகவல்களில் கேரளம் பாதுகாப்பான பகுதி என்றும், சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதில் சிறப்பாக செயல்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த உண்மை தெரியாமல் பிரதமர் பேசுகிறார்.

சங்பரிவார் அமைப்புகள் சில மாநிலங்களை ஆள்வது போல நினைக்கிறார். கேரளாவில் சட்டம் அனைவருக்கும் பொதுவாகவே உள்ளது.” இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

banner

Related Stories

Related Stories