திமுக அரசு

தபால் வாக்கு: தி.மு.க. கூட்டணி முன்னிலை வகிக்கும் தொகுதிகள் நிலவரம்! #TNElections2021

தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் முன்னிலை வகித்துள்ளது.

தபால் வாக்கு: தி.மு.க. கூட்டணி முன்னிலை வகிக்கும் தொகுதிகள் நிலவரம்! #TNElections2021
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளே முன்னிலையில் உள்ளன.

தபால் வாக்கு: தி.மு.க. கூட்டணி முன்னிலை வகிக்கும் தொகுதிகள் நிலவரம்! #TNElections2021

அதன்படி, தற்போது வந்த தகவலின் படி, கொளத்தூர், வேளச்சேரி, திருச்சி மேற்கு, செங்கல்பட்டு, சேப்பாக்கம், திருச்சுழி, காட்பாடி, பாளையங்கோட்டை, அண்ணாநகர், ஆண்டிப்பட்டி, கும்பகோணம், ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், பவானிசாகர், கோபிச் செட்டிப்பாளையம், விருகம்பாக்கம், திருவண்ணாமலை, மதுரை மேற்கு, சைதாப்பேட்டை, திருச்செங்கோடு ஆகிய தொகுதிகளில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி முன்னிலை வகித்து வருகின்றன.

இதற்கிடையே சென்னை ஆயிரம் விளக்கு, விருதுநகரில் 7 தொகுதிகள், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் தபால் வாக்கு எண்ணும் பணி தாமதமாகியுள்ளது. மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் முறையான சமூக இடைவெளியுடன் கூடிய மேஜைகள் ஏற்படுத்தாததால் முகவர்கள் கடுமையான சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories