திமுக அரசு

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நிறைவு.. நாளை பரிசீலனை.. கரூரில் போட்டியிட 70 பேர் மனு தாக்கல்!

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது.

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நிறைவு.. நாளை பரிசீலனை.. கரூரில் போட்டியிட 70 பேர் மனு தாக்கல்!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசமும் முடிவடைந்தது.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி துவங்கியது. இதுவரை தமிழகம் முழுக்க 4ஆயிரத்து 549 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 70 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மேட்டூர் மற்றும் காங்கேயத்தில் 45 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக விளவங்கோடு தொகுதியில் 6 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நாளை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். அதில் தகுதியான வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு, தகுதியற்றவை தள்ளுபடி செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் 22ஆம் தேதி. அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

இதையடுத்து, ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். மே 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

banner

Related Stories

Related Stories