தேர்தல்2021

பண அரசியலை முன்வைக்கும் ஆளும் அதிமுக : வாக்கு விற்பனைக்கல்ல; ஒரு விரல் புரட்சி செய்க - தினகரன் தலையங்கம்!

வாக்குக்கு பணம் கொடுக்கும் வகையில் ஆளும் அதிமுகவினர் செயல்பட்டு வருவதை சுட்டிக்காட்டி தினகரன் நாளேடு தலையங்கம் திட்டியுள்ளது.

பண அரசியலை முன்வைக்கும் ஆளும் அதிமுக : வாக்கு விற்பனைக்கல்ல; ஒரு விரல் புரட்சி செய்க - தினகரன் தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய ஜனநாயகத்தின் முதுகெலும்பாக திகழ்வது குடிமக்களுக்கு வழங்கப்படும் வாக்குரிமையாகும். கோடியில் புரளும் ஒருவரை கூட,தேர்தலில் மக்கள் சக்தி ஒன்றிணைந்தால் வாக்கு அடிப்படையில் வீழ்த்த முடியும். சாமானிய மக்களின் மிகப்பெரிய ஆயுதம் வாக்குரிமையாகும். ஆனால் சமீபகாலமாக, அதிலும் தமிழகத்தில் வாக்குரிமை கேலிக்குரியதாகி வருகிறது. பணத்தால், பரிசு பொருட்களால் எளிதாக தமிழக வாக்காளர்களை விலைக்கு வாங்க முடிகிறது.

தேர்தல்களில் வேட்பாளர்களின் சாதனைகளோடு, தொகுதிக்கு செய்த பணிகள் முன்நிறுத்தப்படுவதில்லை. தொகுதிக்கு எத்தனை கோடி செலவு செய்வார் என்ற கேள்வியே அரசியல் வட்டாரத்தில் முன்நிற்கிறது. விளைவு தமிழக அரசியல் களம் தேர்தல்கள் தோறும் பணமயமாகிறது. இந்தியாவிலேயே அதிக பணம் தமிழக தேர்தல் காலத்தில்தான் பறிமுதல் செய்யப்படுகிறது. தமிழக சட்டசபை தேர்தல் வரும் 6ம் தேதி நடக்கும் நிலையில், பணமும், பரிசு பொருட்களும் வாகன சோதனையில் கணக்கில்லாமல் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் இருந்து சேலத்திற்கு சென்ற கன்டெய்னரில் ஆவணங்கள் இன்றி 36 கோடிக்கு நகைகள் சிக்கியுள்ளன. புதுச்சேரியில் இருந்து தமிழகம் வந்த ஒரு லாரியில் 1.97 கோடி தங்கம், வெள்ளி நகைகள் சிக்கியுள்ளன. மதுரையிலிருந்து கொல்லம் சென்ற ரயிலில் 1.22 கோடி பணம் பறிமுதல், மது பாட்டில்கள், குடங்கள், குத்து விளக்குகள் என வாக்காளர்களுக்கான பரிசு பொருட்கள் தமிழகம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமைச்சர் படம் போட்ட வாட்ச், வேட்டி, சேலைகளை கூட பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதையெல்லாம் பார்க்கும் போது ஆளும்கட்சியினர் மீண்டும் பண அரசியலை முன்வைத்து ஆட்சியை பிடிக்கும் கனவில் திரிவது அப்பட்டமாக தெரிகிறது. தமிழக வாக்காளர்களின் ஏழ்மையை பயன்படுத்தி கொண்டு, அவர்களுக்கு தேர்தல் நேரத்தில் பணம் மற்றும் பரிசு தொகுப்புகளை வழங்க ஆளும் கட்சியினர் முயல்கின்றனர். இத்தகைய பணநாயகம் தேர்தலுக்கு முந்தைய 3 நாட்களில் காட்டாற்று வெள்ளமாக பாயும்.

வாக்களித்தல் அவசியம் என்பதையும், உங்கள் வாக்குவிற்பனைக்கல்ல என்பதையும்கிளிப்பிள்ளைக்கு சொல்வதுபோல் சொல்கிறது. இருப்பினும்இவ்விழிப்புணர்வு பாமர மக்கள்மத்தியில் முழுமையாக போய்சேருவதில்லை. தேர்தல்களில்ஓட்டுக்கு பணம் தருவது அரசியல்கட்சிகளின் கடமை என்றாகி விட்டது. தமிழகத்தில்எழுத்தால், பேச்சால் ஒரு காலத்தில் ஆட்சிமாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. செலவு செய்து, வாக்காளர்கள் விழிப்புணர்வை மேற்கொண்டு வருகிறது.

பண அரசியலை முன்வைக்கும் ஆளும் அதிமுக : வாக்கு விற்பனைக்கல்ல; ஒரு விரல் புரட்சி செய்க - தினகரன் தலையங்கம்!

வாக்களித்தல் அவசியம் என்பதையும், உங்கள் வாக்கு விற்பனைக்கல்ல என்பதையும் கிளிப்பிள்ளைக்கு சொல்வதுபோல் சொல்கிறது. இருப்பினும் இவ்விழிப்புணர்வு பாமர மக்கள் மத்தியில் முழுமையாக போய் சேருவதில்லை. தேர்தல்களில் ஓட்டுக்கு பணம் தருவது அரசியல் கட்சிகளின் கடமை என்றாகி விட்டது. தமிழகத்தில் எழுத்தால், பேச்சால் ஒரு காலத்தில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

ஆனால், அதே தமிழகத்தில் பணத்தால் ஆட்சியை தக்க வைக்க முடியும் என்ற தலைகீழ் மாற்றங்களும் பிற்காலத்தில் ஏற்பட்டதுதான் வேதனையாகும். எனவே வாக்காளர்கள் விழிப்புணர்வு பெறவேண்டியது காலத்தின் கட்டாயம். நம்முடைய வாக்கு தமிழகத்தின் தலைவிதியை மாற்றப்போகும் பேராயுதம். ஓட்டுக்கு பணம் என்பதை முற்றிலுமாக தவிர்த்து, ஒரு விரல் புரட்சியை நிலைநாட்டியாக வேண்டும்.

banner

Related Stories

Related Stories