திமுக அரசு

தொண்டர்களை மீறி கோவை தெற்கு தாரைவார்ப்பு.. பாஜக அடம்பிடித்த தொகுதிகளை தங்களுக்கு வைத்துக்கொண்ட அ.தி.மு.க!

“கூண்டோடு வெளியேறுவோம்” என்ற அ.தி.மு.க தொண்டர்களின் எச்சரிக்கையை மீறி கோவை தெற்கு தொகுதியை பா.ஜ.க-வுக்கு தாரைவார்த்துள்ளது அ.தி.மு.க தலைமை.

தொண்டர்களை மீறி கோவை தெற்கு தாரைவார்ப்பு.. பாஜக அடம்பிடித்த தொகுதிகளை தங்களுக்கு வைத்துக்கொண்ட அ.தி.மு.க!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் அ.தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு நிறைவடைந்து அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அ.தி.மு.கவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பழனி சட்டமன்றத் தொகுதியில் உள்ள கிராமங்களில் பா.ஜ.கவினர், சுவர்களில் தாமரை சின்னத்தை வரைந்து, பழனியில் நாங்கள்தான் போட்டியிடப் போகிறோம் என விளம்பரம் செய்து வந்தனர்.

மேலும், புதுக்கோட்டை தொகுதியையும் பா.ஜ.கவினர் குறிவைத்து பிரச்சாரம் செய்து வந்தனர். புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் பா.ஜ.கவினர் பூத்கமிட்டிகள் அமைத்து வாக்கு சேரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த இரண்டு தொகுதிகளையுமே பா.ஜ.க-வுக்கு ஒதுக்காமல், அ.தி.மு.க வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதனால், இத்தொகுதிகளைச் சேர்ந்த பா.ஜ.க-வினர் அதிருப்தியடைந்துள்ளனர்.

பா.ஜ.கவுக்கு கோவை தெற்கு தொகுதியைக் கொடுத்தால், கட்சியிலிருந்து கூண்டோடு வெளியேறுவோம் எனக் கூறி இன்று அ.தி.மு.க நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர். ஆனால், கோவை தெற்கு தொகுதியை பா.ஜ.க-வுக்கு தாரைவார்த்துள்ளது அ.தி.மு.க தலைமை.

banner

Related Stories

Related Stories