திமுக அரசு

“பிடிக்கலைன்னு போயிட்டா திட்டாதீங்க.. அப்புறம்...” : வெளியேறிய தே.மு.தி.கவுக்கு ஜெயக்குமார் கோரிக்கை!

“அ.தி.மு.க தோற்கும் எனக் கூறும் சுதீஷ் ஜோசியரா? தே.மு.தி.க-வினர் வார்த்தைகளை அளந்து பேச வேண்டும்.” என ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“பிடிக்கலைன்னு போயிட்டா திட்டாதீங்க.. அப்புறம்...” : வெளியேறிய தே.மு.தி.கவுக்கு ஜெயக்குமார் கோரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க-வுடன் பலகட்டங்களாக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதற்கிடையே தே.மு.தி.க துணை பொதுச் செயலாளர் சுதீஷ் அ.தி.மு.க-வை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

ஒருபக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை, மறுபக்கம் அ.தி.மு.க மீது விமர்சனம் என தொடர்ந்து வந்த நிலையில், தே.மு.தி.க கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளது. தொகுதி உடன்பாடு எட்டப்படாத காரணத்தால் அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகுவதாக தே.மு.தி.க அறிவித்துள்ளது.

தே.மு.தி.க ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய சுதீஷ், “தே.மு.தி.க தொண்டர்கள் அனைவருக்கும் இன்று தீபாவளி. அ.தி.மு.கவை அனைத்து தொகுதிகளிலும் தோற்கடிப்போம். அ.தி.மு.க டெபாசிட் இழக்கும்” எனப் பேசினார்.

கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்த சமயத்திலும் கூட சுதீஷ் அ.தி.மு.கவை விளாசிவந்த நிலையில் இன்று அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமார் தே.மு.தி.கவுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமார், “தே.மு.தி.க அ.தி.மு.க உடனான கூட்டணியில் இருந்து விலகுவதால் சேற்றை வாரி இறைக்கக்கூடாது. நாங்கள் கடைசி வரை கூட்டணி தர்மத்தை மீறவில்லை. கூட்டணியில் இருந்து விலகிய பின்னர் கீழ்த்தரமாக பேசக்கூடாது.

அ.தி.மு.க தோற்கும் எனக் கூறும் சுதீஷ் ஜோசியரா? தே.மு.தி.க-வினர் வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். கீழ்த்தரமான அரசியலை தொடர்ந்தால் தே.மு.தி.கவிற்கு எங்களால் பதிலடி கொடுக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories