திமுக அரசு

“தமிழ் மொழியை அழிக்க துடிக்கும் RSS-க்கு எக்காரணம் கொண்டும் நாம் வழிவிட்டு விடக்கூடாது” - ராகுல்காந்தி

இந்தியனாக தமிழ் மொழியையும் அதன் கலாசாரத்தை காப்பது எனது கடமை என ராகுல் காந்தி கன்னியாகுமரியில் மக்களின் முன்னிலையில் பேசியுள்ளார்.

“தமிழ் மொழியை அழிக்க துடிக்கும் RSS-க்கு எக்காரணம் கொண்டும் நாம் வழிவிட்டு விடக்கூடாது” - ராகுல்காந்தி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி கன்னியாகுமரி சர்ச் ரோட்டில் இன்று பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது, “மோடி அரசு தமிழ் மொழிக்கோ, கலாசாரத்துக்கோ மதிப்பு கொடுப்பதில்லை. முதல்வர் பழனிசாமி எல்லாவற்றையும் இழந்து நிற்கிறார். முதல்வர் மக்களின் கோரிக்கைகளை முன்னிறுத்தாமல் மோடி சொல்வதை செய்பவராக இருப்பது வருத்தம். மோடி தொலைகாட்சியை பார்த்து ரசிக்கிறார். தமிழகத்தை டி.வியாக பார்க்கிறார்.

ரிமோட் போன்று தமிழகத்தை மாற்ற பார்க்கிறார். முதல்வர் ஊழல் செய்ததால் சிபிஐ, வருமான வரித்துறையை வைத்து மிரட்டி வருகிறார். தமிழக வரலாறு தமிழர்களை தவிர பிறர் ஆட்சி நடத்தினால் தமிழ் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். இந்த தேர்தலில் நாம் அதை பிரதிபலிக்க வேண்டும். தமிழ் மக்களை முன்னிறுத்தி செயல்படுபவர் முதல்வராக வர வேண்டும்.

இரண்டாவதாக தமிழகம் இந்தியாவுக்கு வழிகாட்டும் மாநிலம். நேற்று நான் கவனித்ததில் காமராஜர்தான் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கிய முதல் குடிமகன். அந்த நேரத்தில் இந்திய பொருளாதார மேதைகள் இலவச மதிய உணவு பொருளாதார சீரழிவை கொடுக்கும் என்றார். ஆனால் பொருளாதார நிபுணர்கள் சொன்னதை கேட்காமல் மக்கள் சொன்னபடி மதிய உணவு வழங்கினார்.

காமராஜர் முயற்சியால் தமிழகம் மாட்டுமல்லாது இந்தியா முழுவதும் மதிய உணவு திட்டம் செயல்பட்டுள்ளது. முதல்வர் பிரதமர் முன் தலை குனிந்து காட்சி அளிக்கிறார். முதல்வர் மக்களுக்கு தலை குனிய வேண்டும் மோடிக்கு அல்ல. நாம் எந்த காரணத்தைக் கொண்டும் தமிழை களங்கப்படுத்த முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ்- க்கு வழிவிட்டு விடக்கூடாது.

மோடியும் ஆர்.எஸ்.எஸும் தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் சிறுமைபடுத்த முயற்சி செய்கிறது. ஒரே நாடு, ஒரே மொழி என்பது மோடி கொள்கை. தமிழ், பெங்காளி ஆகியவை இந்திய மொழி இல்லையா? தமிழ் கலாச்சாரம் இந்திய கலாசாரம் இல்லையா? எனவே நான் இருக்கிறேன். தமிழ் மொழி, கலாசாரம் பண்பாட்டை காப்பாற்ற நான் இருக்கிறேன். அனைத்து மொழி, கலாசாரம், மதங்களை காக்க நான் கண்டிப்பாக துணை நிற்பேன். அனைவருக்கும் நன்றி. வசந்தகுமாரை இழந்ததற்கு வருத்தப்படுகிறேன்.” இவ்வாறு கூறினார்.

banner

Related Stories

Related Stories