தேர்தல் 2024

நாளை வாக்கு எண்ணிக்கை : தபால் வாக்குகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி பேட்டியில் கூறியது என்ன?

தமிழ்நாட்டில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் சரியாக காலை 8 மணிக்கு திறக்கப்படும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதசாகு தெரிவித்துள்ளார்.

நாளை வாக்கு எண்ணிக்கை : தபால் வாக்குகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி பேட்டியில் கூறியது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஜூன் 1-ம் தேதியோடு நிறைவடைந்த நிலையில், நாளை (ஜூன் 4) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதோடு தேர்தல் ஆணையமும் தயார் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு இன்று தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதசாகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, "தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் சென்றடைந்து விட்டனர். வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் சரியாக காலை 8 மணிக்கு திறக்கப்படும். முதலில் தபால் வாக்கு எண்ணப்படும். அதிகளவிலான தபால் வாக்குகள் இருக்கும் இடங்களில் தேவைப்பட்டால் தனி அறையில் எண்ணப்படும். தபால் வாக்குகளின் முடிவுகள் அங்குள்ள தகவல் பலகையில் தெரிவிக்கப்படும். அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வாக்கு எண்ணிக்கைக்கு பிறகே தெரிவிக்கப்படும்.

நாளை வாக்கு எண்ணிக்கை : தபால் வாக்குகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி பேட்டியில் கூறியது என்ன?

அதன்பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்கு எண்ணும் பணி தொடங்கி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் ஒவ்வொரு சுற்றுகளிலும் பெற்ற வாக்கு எண்ணிக்கையை தேர்தல் அலுவலர் அறிவிப்பார்கள். வாக்கு எண்ணிக்கையின் போது ஏதேனும் பிரச்னைகள் இருப்பின் தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் பார்வையாளர் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிப்பார்கள்.

செய்தியாளர்கள் வாக்கு எண்ணும் இடம் தவிர்த்து மற்ற இடங்களில் செய்தியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் தொலைபேசி எடுத்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சோழிங்கநல்லூர் - 30 மேஜைகள், கோயம்பத்தூர் தொகுதிக்குட்பட்ட கவுண்டம்பாளைம் - 20 மேஜைகள், பல்லடம் - 18 மேஜைகள் மற்ற இடங்களில் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.

banner

Related Stories

Related Stories