தேர்தல் 2024

“இப்போது நீங்கள் இல்லாதது வருத்தமளிக்கிறது” - சிறையில் இருக்கும் ஹேமந்த் சோரனுக்கு கல்பனா சோரன் உருக்கம்!

“இப்போது நீங்கள் இல்லாதது வருத்தமளிக்கிறது” - சிறையில் இருக்கும் ஹேமந்த் சோரனுக்கு கல்பனா சோரன் உருக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், இன்று (மே 20) 5-ம் கட்டமாக 49 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் ஜார்க்கண்டில் கண்டே சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. இந்த தொகுதியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில், அம்மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஹேமந்த் சோரனுக்கு அவரது மனைவி கல்பனா சோரன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுருக்கிறார்.

“இப்போது நீங்கள் இல்லாதது வருத்தமளிக்கிறது” - சிறையில் இருக்கும் ஹேமந்த் சோரனுக்கு கல்பனா சோரன் உருக்கம்!

அந்த பதிவு பின்வருமாறு :

"அரசியல், கட்சி, ஆட்சி, எல்லாம் உங்கள் பொறுப்பு. வீடு, அப்பா, அம்மா, குழந்தைகள் மற்றும் குடும்பத்தை கவனித்துக்கொள்வதில் என் பொறுப்பு என்று நான் மகிழ்ச்சியாக இருந்தேன். எனக்கு அரசியலில் வருவதற்கு ஆர்வம் இருந்ததில்லை, இதை செய்ய வேண்டும் என்று நினைத்ததும் இல்லை. ஆனால் எங்கள் வாழ்க்கையை அந்த சர்வாதிகாரிகள் ஜனவரி 31 அன்று மாற்றினர்.

உங்களோடு (ஹேமந்த் சோரன்) சேர்ந்து என் ஆன்மாவும் நான்கு சுவர்களுக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கிறது.

நீங்கள் எப்போதும் ஜார்க்கண்ட் மக்கள்தான் உங்களது பெரிய பலம், பொறுப்பு என்று கருதுகிறீர்கள். இந்தப் பொறுப்பை நிறைவேற்றும் போது, ஒருபுறம் ஏழை, எளிய மக்களை நீங்கள் அரவணைப்பதையும், மறுபுறம் சர்வாதிகாரிகளுக்கு முன்னால் நீங்கள் இருப்பதையும் எங்களால் பார்க்க முடிகிறது.

நான்கு சுவர்களுக்கு (சிறை) வெளியே வந்து உங்களின் ஜார்க்கண்ட் குடும்பத்தை (மக்கள்) நீங்கள் சந்தித்த பிறகுதான், உங்கள் ஆர்வத்துக்குப் பின்னால் உள்ள சக்தியையும் உறுதியையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. சர்வாதிகாரிகளுக்கு முன்னாள் நின்று நீங்கள் உண்மையிலேயே ஜார்க்கண்டை பிரதிபலிக்கிறீர்கள். கோடிக்கணக்கான ஜார்க்கண்ட் மக்களின் தைரியமாக நீங்கள் இருக்கும்போது, உங்களின் தைரியம் ஜார்க்கண்ட் மக்கள்தான்.

“இப்போது நீங்கள் இல்லாதது வருத்தமளிக்கிறது” - சிறையில் இருக்கும் ஹேமந்த் சோரனுக்கு கல்பனா சோரன் உருக்கம்!

இதுவரை மாநிலத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் எனக்குக் கிடைத்திருக்கும் அன்பும் ஆசீர்வாதங்களும் உங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் அன்பினால் மட்டுமே சாத்தியமாகின்றன. என்னுடன் சேர்ந்து, ஜார்க்கண்ட் மக்களும் இந்தியா கூட்டணியின் வேட்பாளர்களை அனைத்து இடங்களிலும் பெரிய வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும் என்று தீர்மானித்துள்ளனர். இதனால் இனி வரும் காலத்தில் எந்த சர்வாதிகாரியும் சதி செய்யும் முன் ஆயிரம் முறை யோசிப்பார்.

என்னுடன் சேர்ந்து கோடிக்கணக்கான மக்களும் உங்களுக்காக காத்திருக்கிறார்கள்.

இன்று, நான் ஒரு புதிய இன்னிங்ஸ் தொடங்குவதற்கு மக்களின் ஆசீர்வாதத்தைப் பெறும்போது, நீங்கள் இங்கு இல்லாதது வருத்தமளிக்கிறது. இந்த புதிய தொடக்கத்தில், உங்களுடனும் ஜார்க்கண்ட் மக்களுடனும் எப்போதும் நான் துணையாக இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன். ஜார்க்கண்ட் எப்போதும் தலைவணங்காது!"

நில மோசடி தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன், கடந்த ஜனவரி 31-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது வரை சிறையில் இருக்கும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories