தேர்தல் 2024

“பாஜகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது; இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

என்னுடைய தந்தை-கழகத் தலைவர் கலைஞர் அவர்களின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், 'என் உயரம் எனக்குத் தெரியும்'.

“பாஜகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது; இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், இன்று மாலை 5 மணியோடு தேர்தல் பிரச்சாரம் நிறைவடையவுள்ளது. இந்நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் தேர்தல் பிரசாரங்களில் அனல் பறந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், தேர்தல் களம் குறித்து, கழகத் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்,.

அதன்விவரம் பின்வருமாறு :-

1. How would you assess prospects of India Bloc and DMK-led alliance this Lok Sabha elections?

ஒன்றிய அரசில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த இந்திய நாட்டு மக்கள் தயாராகிவிட்டார்கள். பா.ஜ.க.வின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. மூன்றாவது முறையாக எனக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள் என்று மோடி கேட்கிறார். இரண்டு முறை மோடியிடம் ஏமாந்த இந்திய மக்கள் இம்முறை மோடியை ஏமாற்றத் தயாராகி விட்டார்கள். ஒன்றிய அரசில் ஆட்சியமைக்கும் வகையில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி முழுமையான வெற்றியைப் பெறும்.

2. What do you see as strengths and weaknesses of India Bloc, NDA? What would you say were the key factors of NDA’s success and Congress’s defeat in the last two elections?

அரசியல் களத்துக்குரிய ஏற்ற இறக்கங்கள் எல்லா அணியிலும் இருக்கும். முந்தைய இரண்டு தேர்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மோடி என்ற பிம்பத்தைக் கட்டமைத்து அதன் பெயரில் வெற்றி பெற்றது. புல்வாமா தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் பலியானதைக்கூட தேர்தல் அரசியலுக்கு பா.ஜ.க. பயன்படுத்தியது. எனினும், கடந்த 2019 தேர்தலிலேயே மோடியையும் பா.ஜ.க.வையும் வீழ்த்துவதற்கான ஃபார்முலாவைத் தமிழ்நாடுதான் உருவாக்கித் தந்தது. தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் மதவாத அரசியலுக்கு எதிரான ஜனநாயக முற்போக்கு சக்திகள் அனைத்தும் ஓரணியில் நின்று ஒரு கொள்கைக் கூட்டணியாகத் தேர்தலை சந்தித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில், காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் வென்றது. பா.ஜ.க.வுக்கு ஓரிடம் கூட தமிழ்நாட்டில் கிடைக்கவில்லை. அந்த ஃபார்முலாவின் விரிவாக்கம்தான் தற்போதைய இந்தியா கூட்டணி.

“பாஜகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது; இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

3.Katchatheevu issue is simmering again. Your view?

தமிழ்நாட்டு மீனவர்களின் நலனைப் பாதுகாக்காத ஒன்றிய பா.ஜ.க. அரசு, மீனவர்களின் படகுகளும் வாழ்க்கையும் பறிபோகக் காரணமான பா.ஜ.க. அரசு தன் தவறுகளைமறைத்து திசைத் திருப்பிட, திடீரென்று கச்சத்தீவு பிரச்சினையைக் கிளறுகிறது. ஆனால், பிரதமர் முன்னிலையிலேயே பொதுமேடையில் கச்சத்தீவை மீட்டுத் தரவேண்டும் என தமிழ்நாட்டு முதலமைச்சர் என்ற முறையில் நான் வைத்த கோரிக்கையை நிறைவேற்ற பிரதமர் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அண்மையில் இலங்கை அமைச்சர்கூட, கச்சத்தீவு விவகாரம் என்னிடம் விவாதித்தது இல்லை என்று தெரிவித்திருப்பதிலிருந்தே பா.ஜ.க.வின் நாடகம் அம்பலமாகிவிட்டது.

4. Ahead of 2019 LS polls, you proposed Rahul Gandhi as PM candidate. Isn't he eligible this time? Isn't a PM candidate vital for any Lok Sabha election?

இந்தியாவின் நம்பிக்கைக்குரிய இளம் தலைவராக ராகுல்காந்தி இருக்கிறார். தற்போது இந்தியா கூட்டணியின் வலிமையும் வெற்றியும்தான் முதன்மையானது என்பதால் அவர் உள்பட கூட்டணியின் அனைத்துத் தலைவர்களுமே பா.ஜ.க.வை வீழ்த்தும் வியூகங்களில்தான் கவனம் செலுத்தி வருகின்றனர். 1977ல் மொரார்ஜி தேசாயும், 2004ல் டாக்டர் மன்மோகன்சிங்கும் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படாமலேயே அந்தப் பொறுப்புக்கு வரவில்லையா? இந்தத் தேர்தல் என்பது யார் அடுத்த பிரதமராக வரவேண்டும் என்பதைவிட யார் பிரதமராகத் தொடரக்கூடாது என்பதற்கானத் தேர்தல்.

“பாஜகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது; இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

5. What has been the discussion within India Alliance on PM candidate? Shouldn’t you play a role in the selection?

அதற்குரிய நேரம் வரும்போது, எனக்கு உரிய பங்கினை நான் ஆற்றுவேன்.

6. What is your assessment of Narendra Modi as PM?

இந்தியாவின் ஜனநாயகம், பன்முகத்தன்மை இவற்றுக்கு எதிரான ஆட்சியைப் பத்தாண்டுகாலம் நடத்தியிருக்கிறார் மோடி. அரசியலமைப்புச் சட்டத்தையும் பா.ஜ.க அரசு மதிக்கவில்லை. இந்தியாவின் தேர்தல் நடைமுறையையே சிதைக்கின்ற போக்குதான் வெளிப்பட்டது. பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாடு மொத்தமாக வஞ்சிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் முகத்தைச் சிதைக்க நினைக்கும் மோடியை, அதிகாரத்தில் இருந்து இறக்காவிட்டால் இந்தியாவில் இன்று நம் கண் முன்னால் பார்க்கும் அனைத்துக்குமே ஆபத்து.

7. Your father was hailed a kingmaker. Do you see yourself in a similar role, a kingmaker to take on the king?

என்னுடைய தந்தை-கழகத் தலைவர் கலைஞர் அவர்களின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், 'என் உயரம் எனக்குத் தெரியும்'.

8. You played a key role in trying to unite allies of India Alliance. Thekkilrunthu Oru Kural-Speaking for India. What was its intent? Impact?

இந்திய அரசியலில் தெற்கிலிருந்துதான் சமூக நீதியின் குரல் ஓங்கி ஒலித்தது. தெற்கிலிருந்துதான் சமத்துவத்தின் குரல் ஒலித்தது. மதவாத அரசியலுக்கு இடம்தராமல் மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான பகுதியாக தெற்கு இருக்கிறது. இந்த உணர்வு கொண்ட பல தலைவர்கள் வடமாநிலங்களில் இருக்கிறார்கள். இருதரப்பின் உணர்வையும் ஒருங்கிணைத்து இந்தியாவின் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா என்ற தலைப்பில் பாட்காஸ்ட்டில் உரையாற்றினேன். பல மில்லியன் பேரை அது சென்று சேர்ந்து, தேர்தல் களத்திற்கான முன்னோட்டப் பரப்புரையாக அமைந்தது. என்னுடைய தமிழ் உரையை ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, வங்காளம், கன்னடம், மராத்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் மாற்றம் செய்து வெளியிட்டதால் நல்ல விளைவை ஏற்படுத்தியது.

9. Was it merely to strengthen India Bloc or were you looking at a larger political role in the future?

இந்தியா கூட்டணியைக் கட்டமைப்பதில் மேற்கொண்ட பணியே பெரிய பணிதான். தி.மு.க. என்பது மாநிலக் கட்சி. பல்வேறு மாநிலங்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காகப் போராடும் கட்சி. பல உரிமைகளைப் பெற்றுத் தந்த கட்சி. அந்த அடிப்படையில்தான் தி.மு.க.வின் தலைவரான என்னுடைய செயல்பாடுகள் எப்போதும் இருக்கும்.

10. How do you foresee the poll battle in TN this election? Tougher? Easier?

வெற்றி மீதான நம்பிக்கையுடன் தேர்தலை எதிர்கொள்கிறோம். காரணம், தி.மு.க. மீதும் அதன் கூட்டணி மீதும் தமிழ்நாட்டு மக்கள் பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். கடந்த மூன்றாண்டு கால தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏதேனும் ஒரு வகையில் பயன் தந்திருப்பதால் மக்களின் நம்பிக்கைக்குரியதாக தி.மு.க உள்ளது.

“பாஜகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது; இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

11. Why didn’t you insist, like last time, that smaller allies like VCK and MDMK should contest on ‘Rising Sun’ symbol?

கடந்த முறை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தனிச் சின்னத்தில்தான் போட்டியிட்டார். கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் அவரது கட்சியினர் தனிச் சின்னத்தில் போட்டியிட்டனர். அதுபோல, ம.தி.மு.கவும் இம்முறை தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்பியது. ஓர் அரசியல்கட்சி தனக்கான சின்னத்தைத் தேர்ந்தெடுத்துப் போட்டியிடுவதோ,தோழமைக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதோ அந்தக் கட்சியின் உரிமை சார்ந்தது. அதை மதிப்பதுதான் ஜனநாயகப் பண்பு.

12. How do you counter the dynasty politics campaign?

வாரிசு அரசியல் என்பது நாங்கள் கேட்டுக் கேட்டு புளித்துப் போன குற்றச்சாட்டு. வேறு குறை சொல்ல ஏதுமில்லாததால் இதைச் சொல்கிறார்கள். இதற்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. மக்கள் எங்களுக்கு ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்து வெற்றி பெற வைப்பது தான் அவர்களுக்கு மக்கள் சொல்லும் பதில் ஆகும்.

13. And, corruption charges against your regime?

என்ன ஆதாரம் இருக்கிறது? ஆதாரம் இருந்தால் கொடுங்கள்.

ஊழல் வழக்கில் இரண்டு முறை நீதிமன்றத்தால் தண்டனை பெற்று பதவி இழந்தவர் ஜெயலலிதா. முதலமைச்சராக இருந்தபோதே ஊழல் வழக்கில் நான்கு ஆண்டு சிறைத் தண்டனை பெற்று சிறைக்கு போனவர் ஜெயலலிதா.

அவரை அடையாளப்படுத்தும் போது, ஊழல் ராணி என்று ஊடகங்கள் சொல்லி இருக்கிறீர்களா? பாஜகவின் தேர்தல் பத்திர ஊழலை உச்சநீதிமன்றம் அம்பலப்பத்தி விட்டதே. மோடியை ஊழல் மோடி சொல்லும் தைரியம் இந்த நாட்டில் ஊடகங்களுக்கு உண்டா?

14. In retrospect, would you say Udhayanidhi and A Raja could have avoided the Sanatana remarks?

எல்லா மதத்தினருக்குமான இயக்கம்தான் தி.மு.கழகம். அதே நேரத்தில், மனிதர்களிடையே பிறப்பால் பாகுபாடு கூடாது என்கிற சமூக நீதிக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு தி.மு.க செயல்படுகிறது. சமூக நீதிக்கு எதிரான முறைகளைத்தான் அண்ணா, கலைஞர் தொடங்கி இன்றைய தி.மு.க.வினர் வரைசுட்டிக்காட்டியிருக்கிறார்களே தவிர, தனிப்பட்ட எந்த மதத்தையும் பற்றி விமர்சிக்க வேண்டிய தேவை தி.மு.க.வுக்கு இல்லை. மதத்தை வைத்து அரசியல் செய்யய நினைப்பவர்கள் தி.மு.கவினரின் பேச்சைத் திரித்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள். ஆனால், மக்களுக்கு உண்மை தெரியும் என்பதால் திரிபுவாதிகளைப் பொருட்படுத்தவில்லை.

“பாஜகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது; இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

15. What is DMK’s view on God and Religion?

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பேரறிஞர் அண்ணா எங்களுக்கு வழிகாட்டியிருக்கிறார். கோயில் கூடாது என்பதல்ல அது கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது என்று கலைஞர் எழுதியிருக்கிறார். அதுதான் தி.மு.கவின் கொள்கை.

16. You accuse AIADMK and BJP of having a ‘secret alliance’. What about AIADMK’s allegation of secret pact between DMK and BJP?

மோடியை பழனிசாமி விமர்சிப்பது இல்லை, மோடி ஆட்சியை விமர்சிப்பது இல்லை, மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று பழனிசாமி சொல்வது இல்லை. இதை வைத்துதான் பாஜகவுடன் பழனிசாமி வைத்திருப்பது கள்ளக் கூட்டணி என்கிறேன். இதற்கு நேரடியாக அவரை பதில் தரச் சொல்லுங்கள்.

17. TN's relationship with Centre has been turbulent. Was it all political?

உறவுக்கு கைக் கொடுப்போம், . உரிமைக்கு குரல் கொடுப்போம் என்பதுதான் தி.மு.க.வின் ஒன்றிய-மாநில அரசுகளின் உறவுக்கான இலக்கணம். இந்திராகாந்தி அம்மையார், ராஜீவ்காந்தி, வாஜ்பாய் என தி.மு.க. கூட்டணிக்கு மாற்றான அணியைச் சேர்ந்தவர்கள் பிரதமராக இருந்தபோதும் மாநில நலன் சார்ந்த செயல்பாடுகளில் தி.மு.க ஒருங்கிணைந்தே செயல்பட்டுள்ளது. உரிமைகளை வலியுறுத்திப் பெற்றுள்ளது. ஆனால், மோடி அரசு மாநிலங்களின் உரிமைகளை மதிக்கவில்லை. மாநிலத்திற்குத் தேவையான நிதியை வழங்கவில்லை. வெள்ளம் போன்ற பேரிடர் காலத்திலும் உதவவில்லை. நானே பிரதமரிடம் நேரில் வலியுறுத்தியும் நிவாரணம் கிடைக்கவில்லை. எனவே இது அரசியலா என்று கேட்க வேண்டியது முதலமைச்சரான என்னிடம் அல்ல, பிரதமரிடம் தான்.

18. How would you describe your relations with Governor RN Ravi now?

தனிப்பட்ட முறையில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுடன் எனக்கு எந்த முரண்பாடும் இல்லை. ராஜ்பவனில் அமைச்சர் பொன்முடி பதவியேற்பு நிகழ்வு முடிந்ததும், தேர்தல்பரப்புரைக்குச் செல்கிறேன் என்று ஆளுநர் ரவி அவர்களிடம் தெரிவித்து வாழ்த்துப் பெற்றுத்தான் புறப்பட்டேன். அந்தப் பதவிக்குரிய மாண்பினை தி.மு.க மதிக்கிறது. ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைவிட, நியமனப் பதவியான ஆளுநர் பதவிக்கு அதிகாரம் கிடையாது என்பதையும், ஆளுநரின் அதிகார அத்துமீறல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதிலும் தி.மு.க எப்போதும் உறுதியாக இருக்கிறது.

19. You shared a cup of coffee with Governor after a court direction. What did you discuss? Did it help?

உச்சநீதிமன்ற உத்தரவினால்தான் அமைச்சர் பொன்முடியின் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது. தி.மு.க சட்டரீதியாக இதனை சாதித்தது. நீதிமன்ற உத்தரவையேற்று கவர்னரும் செயல்பட்டார். அந்த வகையில், அன்றைய நிகழ்வு சுமூகமாகவே இருந்தது. அதிகார வரம்பிற்குட்பட்டு சட்டரீதியாக செயல்படும் எந்த நிகழ்வும் சுமூகமாகத்தான் இருக்கும்.

20. In these days of rising expectations that have become insistent demands, bribing voters has become a norm. Comment?

பாரபட்சம் அற்ற முறையில் தேர்தல்கள் நடைபெற வேண்டும் என்பதே எங்களது எண்ணம் ஆகும்.

“பாஜகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது; இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

21. Why the decision to give up your dream for a Pen Memorial in the sea? You got clearance from high court and Union environment ministry.

கலைஞர் நூற்றாண்டு தொடங்கிய ஏறத்தாழ இந்த ஓராண்டு காலத்தில் சென்னையில் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம், திருவாரூரில் அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்ட கலைஞர் கோட்டம் உள்ளிட்ட பல நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், மெரினா கடற்கரையில் அண்ணாவுக்குப் பக்கத்தில் கலைஞர் ஓய்வு கொள்ளும் இடத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவிடத்தை அமைத்திருப்பதுடன் நவீனத் தொழில்நுட்பத்திலான கலைஞர் உலகமும் உருவாக்கப்பட்டுள்ளது. கலைஞரின் புகழைப் போற்றும் வகையில், மக்களுக்குப் பயன்படும் வகையிலும் உரிய நேரத்தில் கலைஞருக்கான நினைவுச் சின்னங்கள் ஒவ்வொன்றாக அமைக்கப்படும்.

22. You have rolled out several pioneering welfare schemes. What would you pick as the most remarkable of them all, for which you would be most remembered?

திராவிட மாடல் அரசின் திட்டங்கள் ஒவ்வொன்றுமே மக்களால் என்றென்றும் நினைவில் வைத்துக் கொள்ளும் திட்டங்கள்தான். காரணம், அந்தத் திட்டங்கள் மக்களுக்கு நேரடிப் பயன் தந்து, அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்குத் துணை நிற்கிறது. இந்தியாவுக்கே முன்னோடித் திட்டங்களான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நகரப் பேருந்துகளில் மகளிருக்கான விடியல் பயணம், மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்றவை முதன்மையானத் திட்டங்கள்.

23. Do political ideologies have relevance today?

திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளான சமூக நீதி, சுயமரியாதை, மொழியுணர்வு உள்ளிட்டவை எல்லாக் காலத்திற்கும் பொருத்தமானவையே. அவற்றை நடைமுறைப்படுத்துவதில் காலத்திற்கேற்ற சில மாறுதல்கள் தேவைப்படுவதும், அதற்கேற்ப கொள்கைகளை வடிவமைப்பதும் கொள்கை சார்ந்த அரசியல் இயக்கங்களின் தேவையாக உள்ளது. எடுத்துக்காட்டாக, சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆட்சியில் அரசுப் பணிகளுக்காகக் கொண்டு வரப்பட்ட வகுப்புவாரி இடஒதுக்கீடு, காலத்திற்கேற்ப வளர்ந்து தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சியில் 69% என நிலைப்பெற்றது.

அதுபோல ஒன்றிய அரசுப் பணிகளில் பட்டியல் இனத்தவர், பழங்குடி மக்கள் ஆகியோருடன் ஓ.பி.சி.க்கான 27 விழுக்காடு இடஒதுக்கீடு பிரதமர் வி.பி.சிங் காலத்தில் கொண்டு வரப்பட்டது. இன்றைய சூழலில் தனியார் துறையில் அனைத்து சமுதாயத்தினருக்குமான சம வாய்ப்பை வலியுறுத்தி இடஒதுக்கீடு என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. ஆகவே அடிப்படைக் கொள்கை நிலையானது. அவசியமானது. எந்தக் காலமாக இருந்தாலும் கொள்கை அரசியல் தான் நிலைக்கும், நீடிக்கும். மற்றவை தற்காலிகமானவையே.

24. Youngsters remain tentative, hesitant voters. Do you think younger politicians like Udhayanidhi, Vijay, Annamalai can change that?

தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளரான உதயநிதி அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் 25வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு திராவிட இயக்கக் கொள்கைப் பயிற்சிப் பாசறை நடத்தி அரசியல்-சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தி.மு.க. இதை ஒவ்வொரு தலைமுறையிலும் மேற்கொண்டு வருகிறது. இளைஞரணிப் பொறுப்பை நான் ஏற்றிருந்த காலத்திலும் இதுபோன்ற பயிற்சி வகுப்புகள் பல மாவட்டங்களில் நடைபெற்றன. வரலாற்றைத் திரும்பத் திரும்பச் சொல்லித் தரவேண்டும். உண்மைகளைப் புரிய வைக்கவேண்டும். அதை தி.மு.க. எப்போதும் முன்னெடுக்கும். மற்ற கட்சிகள், இயக்கங்களின் செயல்பாடு பற்றி நான் சொல்வது சரியானதாக இருக்காது.

25. What would you consider your high moments as TN CM?

காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த நாள், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தின் அடிப்படையில் பணி ஆணைகளை வழங்கிய நாள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைத் தொடங்கி வைத்த நாள், நான் முதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்த நாள் - உள்ளிட்ட மறக்க முடியாத பல தருணங்கள் உள்ளன.

26. You are one of the most accommodating and broad-minded politicians, who is willing to meet, interact, share dais and hold dialogues with rivals. Has it helped?

அரசியல் காரணங்களுக்காக மாறுபட்டிருக்கலாமே தவிர, எவர் மீதும் எப்போதும் எனக்குத் தனிப்பட்ட பகை கிடையாது. அம்மையார் ஜெயலலிதா அவர்கள் பதவி ஏற்ற போது சென்னை மேயராக இருந்த நான் அந்த நிகழ்வில் பங்கேற்றேன். சுனாமி நிவாரண நிதியை அவரிடம் நேரில் வழங்கினேன். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது அங்கு சென்று உடல்நலன் குறித்து கேட்டறிந்தேன். அதுபோலவே எல்லா அரசியல் தலைவர்களிடமும் பழகுவதை வழக்கமாகக்கொண்டிருக்கிறேன். பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட திராவிடத் தலைவர்கள் கடைப்பிடித்த பண்பைத்தான் நானும் கடைப்பிடிக்கிறேன்.

27. Several in DMK believed that the party might have won in 2016 assembly election had you been projected CM candidate, despite the 2G scam. In such a scenario, you could well be trying for a hattrick in 2026, don't you agree

இப்படி இருந்திருந்தால், அப்படி இருந்திருந்தால் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. கடந்த 2019, 2021 நாடாளுமன்ற-சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றதுபோல இந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்று ஹாட்ரிக் எடுப்போம். நல்லாட்சியைத் தொடர்ந்து வழங்கி அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தல் களத்திலும் நிச்சயம் தி.மு.க. கூட்டணி வெல்லும். எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories