தேர்தல் 2024

பாஜக வேட்பாளர் நயினார் உறவினரிடமிருந்து ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: பாஜக நிர்வாகிக்கு சம்மன்

பாஜக வேட்பாளர் நயினார் உறவினரிடமிருந்து ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: பாஜக நிர்வாகிக்கு சம்மன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா, பரிசு பொருட்கள் உள்ளிட்ட எதையும் வழங்க தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

தேர்தல் நடத்தை விதிகளை மீறி யாரேனும் செயல்பட்டால், அவர்கள் மீது தக்க நடவடிக்கை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தேர்தல் அதிகாரிகள், போலீசார், கண்காணிப்பு நிலைக்குழுவினர் என அனைவரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் கடந்த 6-ம் தேதி இரவு தாம்பரம் இரயில் நிலையத்தில் இருந்து நெல்லை விரைவு இரயிலில் ரூ.4 கோடி பணத்தை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

பாஜக வேட்பாளர் நயினார் உறவினரிடமிருந்து ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: பாஜக நிர்வாகிக்கு சம்மன்

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன், லாரி ஓட்டுநர் பெருமாள் என்று தெரியவந்தது. மேலும் இதில் சதீஷ் என்பவர் பாஜகவின் உறுப்பினராக உள்ளது கண்டறியப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் விசாரித்ததில் இந்த ரூ.4 கோடி பணத்தை நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு செல்லப்பட்டதாக வாக்குமூலம் அளித்தனர்.

பாஜக வேட்பாளர் நயினார் உறவினரிடமிருந்து ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: பாஜக நிர்வாகிக்கு சம்மன்

இதையடுத்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பாஜக வேட்பாளர் நயினாருக்கு சொந்தமான வீடு, நண்பர்கள் வீடு, ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் அதிகாரிகள், வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரூ.2 லட்சம் பணம், வேஷ்டி - 100, நைட்டி - 44, ஃபுல் பாட்டில்- 25, டின் பீர்- 16 ஆகியவற்றை கைப்பற்றினர்

இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இன்று பாஜக நிர்வாகி உட்பட 4 பேருக்கு தாம்பர பெருநகர காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. பா.ஜ.க. மாநில தொழில்துறை பிரிவு துணைத்தலைவர் கோவர்தனன், கிரீன்வேஸ் சாலையில் நடத்திவரும் ஹோட்டலிலும் ரூ.1 கோடி பணம் கைப்பற்றப்பட்டது.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பாஜக நிர்வாகிக்கு தாம்பரம் பெருநகர காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories