தேர்தல் 2024

Fact Check : ராகுல் காந்தி மீது போக்ஸோ வழக்கு? தீ போல தொடர்ந்து பொய்யை பரப்பும் பாஜக - உண்மை என்ன?

ராகுல் காந்தி மீது போக்ஸோ வழக்கு உள்ளதாக பாஜகவினர் போலி செய்தி பரப்பி வரும் நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Fact Check : ராகுல் காந்தி மீது போக்ஸோ வழக்கு?  தீ போல தொடர்ந்து பொய்யை பரப்பும் பாஜக - உண்மை என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து களமிறங்கும் நிலையில், பாஜக மற்றும் பாஜக ஆதரவு கட்சிகள் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக போலி செய்தி பரப்பி வருகிறது.

அந்த வகையில் தற்போது காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி மீது பாலியல் வன்கொடுமை வழக்கு உள்ளதாக போலி செய்தியை பரப்பி வருகிறது. இதுகுறித்த முழு விவரத்தை பாப்போம்...

Fact Check : ராகுல் காந்தி மீது போக்ஸோ வழக்கு?  தீ போல தொடர்ந்து பொய்யை பரப்பும் பாஜக - உண்மை என்ன?

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் களம் காண்கிறார். இந்த சூழலில் நேற்று இவர் அங்கே மனுதாக்கல் செய்தார். பொதுவாக வேட்புமனு தாக்கல் செய்யும்போது, தனது விபரங்கள், சொத்து விபரங்கள், வழக்குகள் உள்ளிட்டவையை குறிப்பிட்டு சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு ராகுல் காந்தி தனது Affidavit-ல் தன் மேல் உள்ள வழக்குகளையும் குறிப்பிட்டிருந்தார்.

Fact Check : ராகுல் காந்தி மீது போக்ஸோ வழக்கு?  தீ போல தொடர்ந்து பொய்யை பரப்பும் பாஜக - உண்மை என்ன?

அதில் SS. 228A IPC, SS. 23(4) POCSO மற்றும் SS. 74 Juvenile Justice Act” ஆகிய குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த வழக்கானது பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளங்களை வெளிப்படுத்தியதால் பதிவு செய்யப்பட்டது ஆகும். அதாவது கடந்த 2021-ம் ஆண்டு டெல்லியில் 9 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

2021-ல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ராகுல் ஆறுதல்
2021-ல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ராகுல் ஆறுதல்

இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் போராட்டங்கள் என எழுந்த நிலையில், ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது அதுகுறித்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் நியாத்துக்காக குரல் எழுப்பிய ராகுல் காந்தி, சிறுமியின் குடும்பத்தினரை அடையாளப்படுத்தியதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Rahul Gandhi Affidavit details
Rahul Gandhi Affidavit details

பொதுவாக பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தினால், அது குற்றச்செயலாக கருதப்படும். அந்த வகையில் ராகுல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த விசாரணை நிலுவையில் உள்ளது, குற்றச்சாட்டுகளும் இன்னும் நிலுவையில் உள்ளன. POCSO சட்டத்தில் பல பிரிவுகள் உள்ளது. அதில் ஒரு பிரிவின் கீழ், ராகுல் காந்தி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

ஆனால் இதுகுறித்து உண்மை எதுவும் தெரியாமல், பாஜகவினர் ராகுல் மீது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு உள்ளதாக வதந்தி பரப்பி வருகின்றனர். சும்மாவே பாஜக தொடர்ந்து வதந்தி பரப்புவதில் முதலிடத்தில் உள்ளது. தற்போது அதனை மீண்டும் உறுதி செய்யும் விதமாக ராகுல் காந்தி விவகாரத்தில் பாஜகவினர் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories