தேர்தல் 2024

நாடாளுமன்ற தேர்தல் 2024: தஞ்சாவூர் உள்ளிட்ட 8 மத்திய மாவட்டங்களுக்கான திமுகவின் அசத்தலான வாக்குறுதிகள்!

நாடாளுமன்ற தேர்தல் 2024: தஞ்சாவூர் உள்ளிட்ட  8 மத்திய மாவட்டங்களுக்கான  திமுகவின் அசத்தலான வாக்குறுதிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாட்டில் ஏப்ரல்.19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவுக்கான பல முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தது.

அதில் ஒவ்வொரு மாவட்டங்களுக்கான திட்டங்கள் குறித்த அறிவிப்பும் வெளியானது. அந்த பட்டியலில் தஞ்சாவூர் உள்ளிட்ட உட்பட 8 மத்திய மாவட்டங்களுக்கான அறிவிப்பு பின்வருமாறு :

=> தஞ்சாவூர் :

1. பட்டுக்கோட்டை ரயில் வழித் தடத்தில் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் இயக்கப்படும்.

2. பட்டுக்கோட்டை - மன்னார்குடி புதிய ரயில் பாதை அமைக்கப்படும், மேலும் ஒன்றிய அரசில் தி.மு.கழகம் பங்கேறிருந்த காலத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் வைத்த கோரிக்கையான பட்டுக்கோட்டை - தஞ்சாவூ புதிய ரயில் பாதை அமைக்கப்படும்.

=> திருச்சி :

1. திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையை ரயில் பெட்டித் தொழிற்சாலையாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த பணியில் திருச்சி பி.எச்.இ.எல் நிறுவனமும் இணைந்து பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

2. தேசிய நெடுஞ்சாலையில் பால்பண்ணை முதல் துவாக்குடி வரை உயர்மட்டச் சாலை அமைக்கப்படும்.

=> திருவாரூர் :

திருவாரூரில் தேசிய வேளாண் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். மற்றும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு தொடங்கப்பட ஆவன செய்யப்படும்.

நாடாளுமன்ற தேர்தல் 2024: தஞ்சாவூர் உள்ளிட்ட  8 மத்திய மாவட்டங்களுக்கான  திமுகவின் அசத்தலான வாக்குறுதிகள்!

=> அரியலூர் :

1. அரியலூர் முதல் சிதம்பரம் வரை ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்குடி வழியாகப் புதிதாக இரயில் பாதை அமைத்து இரயில் சேவை ஏற்படுத்தப்படும்.

2. அரியலூர் நகராட்சியில் அமைந்துள்ள இரயில் நிலையத்தில் விரைவு மற்றும் சிறப்பு இரயில்கள் நின்று செல்ல வழிவகை செய்யப்படும்.

=> பெரம்பலூர் :

ஆத்தூர் ரயில் நிலையம் முதல் பெரம்பலூர், அரியலூர் ரயில் நிலையம் வரை புதிய அகல ரயில் பாதை அமைக்க ஆவன செய்யப்படும்.

=> நாகப்பட்டினம் :

நாகை துறைமுகத்தைச் சரக்குப் பெட்டகத் துறைமுகமாக மாற்றிட அல்லது வெள்ளப்பள்ளம் அருகே சரக்குப் பெட்டகத் துறைமுகம் அமைக்க ஆவன செய்யப்படும்.

=> புதுக்கோட்டை :

தஞ்சாவூர்,கந்தர்வக்கோட்டை,புதுக்கோட்டை, திருப்பத்தூர், வேலூர், மதுரை வரை புதிய இரயில் பாதை அமைத்து புதுக்கோட்டை இரயில்வே நிலையம் புனரமைக்கப்படும்.

=> மயிலாடுதுறை :

30 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட, மயிலாடுதுறை மற்றும் தரங்கம்பாடி புகைவண்டித் தடத்தை சீரமைத்து, காரைக்கால், நாகூர், வேளாங்கண்ணி, திருநள்ளாறு பயணிகள் பயணம் செய்ய ஏதுவாக அமைத்துத் தரப்படும்.

banner

Related Stories

Related Stories