தேர்தல் 2024

நாடாளுமன்ற தேர்தல் - 2024 : 43 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்!

நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் - 2024 : 43 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாகப் பாசிச ஆட்சியை நடத்தி வரும் பா.ஜ.கவை வீழ்த்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கித் தேர்தல் களத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்தியா கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் வேக வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தியா கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே 39 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில் 43 தொகுதிகளுக்கு 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று டெல்லியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டார். அசாம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜல்லூர் தொகுதியில் வைபர் கெலாட், மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா தொகுதியில் நகுல் நாத் போட்டியிடுகிறார்கள். இந்தியா கூட்டணியில் தொகுதி உடன்பாடுகள் இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டிலும் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories