தி.மு.க

டாக்டர் கலைஞர் 2 : “கலைஞர் பலருக்கு இதயத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்” - மருத்துவர் எழிலன் !

மத்திய அரசிடமிருந்து பள்ளி சுகாதாரத் திட்டங்களுக்கு வரும் நிதி, சுகாதாரத் துறையில் உள்ள நிதி, கல்வி நிதி ஆகியவற்றில் கொஞ்சம் கொஞ்சம் மாற்றி, இதற்கான நிதியை உருவாக்குகிறார்.

டாக்டர் கலைஞர் 2 : “கலைஞர் பலருக்கு இதயத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்” - மருத்துவர் எழிலன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

'டாக்டர்' கலைஞர் - 3 : இதயத்தின் நிறம் மஞ்சள்! - மருத்துவர் எழிலன்

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தன் ஆட்சிக் காலத்தில் மருத்துவத் துறையில் நிகழ்த்திய மகத்தான மக்கள் பணிகள் பற்றி வாரந்தோறும் இங்கே... 

1996-ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில், மருத்துவம் மற்றும் பொருளாதாரத் துறையினர் இணைந்து பல்வேறு ஆய்வு அறிக்கைகளை முன்வைத்தனர். அந்தக் கருத்தரங்கில் சென்னை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் தலைமைப் பேராசிரியர், இருதய சிகிச்சை நிபுணர் மறைந்த டாக்டர்.விக்டர் சாலமன் ஓர் ஆய்வுக் கட்டுரையை முன்வைத்தார்.

டாக்டர் கலைஞர் 2 : “கலைஞர் பலருக்கு இதயத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்” - மருத்துவர் எழிலன் !

அன்றைக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக இருந்தவர் பேராசிரியர் மு.நாகநாதன். டாக்டர் விக்டர் சாலமன் முன்வைத்த கட்டுரை, தமிழ்நாட்டில் ‘ருமாட்டிக் ஹார்ட் டிசீஸ்’ (Rheumatic Heart disease) என்று சொல்லப்படும் இருதய நோய் 28 சதவிகிதமாக‌ இருப்பதைச் சுட்டிக்காட்டியது.

சிறுவயதில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இருமல், சளி மூலம் வரும் அக்யூட் ருமாட்டிக் ஃபீவர் (Acute Rheumatic fever) என்று சொல்லப்படும் காய்ச்சல், மூட்டுகளை வீங்க வைப்பது, தோலில் தேமல் போன்ற பிரச்சினைகளை உருவாக்குவது போன்றவை எல்லாம் இந்த நோய்க்கான காரணங்களாகச் சொல்லப்பட்டன‌. குழந்தைகளிடையே வேகமாகப் பரவும் இந்த நோயைத் தடுப்பதற்கான திட்டத்தையும் தன்னுடைய ஆய்வுக் கட்டுரையில் முன்வைத்திருந்தார் டாக்டர் விக்டர் சாலமன்.

டாக்டர் கலைஞர் 2 : “கலைஞர் பலருக்கு இதயத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்” - மருத்துவர் எழிலன் !

முளையிலேயே களையப்பட்ட முள் 

எந்தெந்தக் குழந்தைகளுக்கு இருமல், சளி ஏற்பட்டு காய்ச்சல், இருதய படபடப்பு, மூட்டு மற்றும் கைகால்கள் வீக்கம் என்று தொடர்ச்சியான அறிகுறிகள் வருகிறதோ, அந்தக் குழந்தைகளுக்கு பெனிசிலின் மாத்திரைகள் கொடுத்தால், அந்தக் குழந்தைகள் பெரியவர்களாக வளரும்போது இருதயத்தில் குழாய்ச் சுருக்கங்கள் வராமல் தடுத்து விடலாம் என்பது அவர் சொன்ன‌ தீர்வு.

அந்த இருதயக் குழாய்ச் சுருக்கங்கள்தான் மேற்சொன்ன ருமாட்டிக் இருதய நோய். அது ஏற்பட்டுவிட்டால், பின்னர் இருதயக் குழாய் மாற்று அறுவை சிகிச்சைதான் செய்ய வேண்டும். எத்தனை பேருக்கு இருதயக் குழாய் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியும்? அப்படிச் செய்தாலும்கூட நிறைய பேர், நிறைய இருதயப் பிரச்சினைகளுடன் இறக்கிறார்கள். ஆக 28 சதவிகிதமாக‌ இருக்கக்கூடிய இந்த அளவைக் குறைக்க வேண்டும் என்றால், தொடக்கத்திலேயே, பள்ளிக் குழந்தைகள் அளவிலேயே கண்டறிந்து, மருத்துவம் செய்ய வேண்டும் என அவருடைய ஆய்வுக் கட்டுரை கூறியது.

டாக்டர் கலைஞர் 2 : “கலைஞர் பலருக்கு இதயத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்” - மருத்துவர் எழிலன் !

தலைவர் கலைஞர் அவர்களுடைய சிறப்புகளில் ஒன்று அவருக்கு எல்லா துறைகளிலும் கட்சிக்கு அப்பாற்பட்டு, கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு நண்பர்கள் இருப்பார்கள். அந்த வகையில், சென்னை பல்கலைக்கழக பொருளாதாரப் பேராசிரியர் மு.நாகநாதன், கலைஞர் அவர்களின் நடைப்பயிற்சி நண்பர். கல்லூரியில் சமர்ப்பிக்கப்பட்ட டாக்டர் விக்டர் சாலமன் அவர்களின் கட்டுரை குறித்து நடைப்பயிற்சியின் போது அவர் கலைஞரிடம் பகிர்ந்துகொள்கிறார்.

  பல துறைகளின் நிதிக்கொடை

திட்டத்தைச் செயல்படுத்த கல்வித்துறை, சுகாதாரத்துறை, நிதித்துறை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சி தேவை. அந்த அடிப்படையில் வாழ்வொளித் திட்டம் முதலமைச்சரின் கீழ் அமலாக்கப்பட்டது. மத்திய அரசிடமிருந்து பள்ளி சுகாதாரத் திட்டங்களுக்கு வரும் நிதி, சுகாதாரத் துறையில் உள்ள நிதி, கல்வி நிதி ஆகியவற்றில் கொஞ்சம் கொஞ்சம் மாற்றி, இதற்கான நிதியை உருவாக்குகிறார்.

விரிவாக விசாரித்துவிட்டு, ‘இந்தத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும். நிதி ஒதுக்கீடுகளை எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று சொல்லிவிட்டு, அடுத்த நாளே நிதி அமைச்சர், நிதிச் செயலாளர், சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறைச் செயலாளர், கல்வி அமைச்சர், கல்வித்துறைச் செயலாளர் உள்ளிட்டோரை அழைத்து, கூட்டம் போட்டு ஆலோசனை நடத்துகிறார். அதன் முடிவில்தான், ‘வாழ்வொளித் திட்டம்’ என்கிற இந்த மகத்தான திட்டம் உருவானது.

டாக்டர் கலைஞர் 2 : “கலைஞர் பலருக்கு இதயத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்” - மருத்துவர் எழிலன் !

மஞ்சள் அட்டை மகத்துவம் 

திட்டத்தின் அடிப்படையில், சளி, இருமல், காய்ச்சல் என்று தொடங்கி இருதய படபடப்பு, மூட்டு மற்றும் கைகால்கள் வீக்கம் ஏற்படும் குழந்தைகளைக் கண்டறிந்து ஒரு மஞ்சள் அட்டை வழங்கும் பொறுப்பு பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டது.

அந்த மஞ்சள் அட்டையை எடுத்துக்கொண்டு, அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்குச் செல்லும் குழந்தைகளைப் பரிசோதித்து, அவர்களுக்கு பத்து ஆண்டுகளுக்கு பெனிசிலின் ஊசி அல்லது மாத்திரைகள் வழங்கும் பொறுப்பு அரசு மருத்துவருக்கு வழங்கப்பட்டது. இதுதான் வாழ்வொளித் திட்டத்தின் வடிவமைப்பு.

வாழ்வொளியின் சாதனை

திட்டம் அமலாக்கப்பட்டதைத் தொடர்ந்து பல இலட்சம் மாணவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் அளிக்கப்படுகிறது. 1996-2001 ஆட்சிக் காலத்தில் தொடங்கி, அமலாக்கப்பட்ட இந்தத் திட்டம் அடுத்தடுத்த ஆட்சிகளில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டதன் விளைவு, 1996-ஆம் ஆண்டில் 28% இருந்த நோயின் அளவு, 2016-ஆம் ஆண்டில் சென்னை மருத்துவக் கல்லூரி ஆய்வின் அடிப்படையில் 0.8 சதவிகிதம் என்று குறைந்துவிட்டது.

இது ஒரு மகத்தான சாதனை. சிறு வயது முதல் இருதய படபடப்பில் தொடங்கி, இருதய நோய் தாக்கி இறந்து போகவிருந்த பல லட்சம் குழந்தைக‌ளின் வாழ்வை, கலைஞரின் வாழ்வொளித் திட்டம் காப்பாற்றி இருக்கிறது. அதனால் அழுத்தமாகச் சொல்லலாம், கலைஞர் பலருக்கு இதயத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்!

...சிகிச்சை தொடரும்

banner

Related Stories

Related Stories