தி.மு.க

“முத்தமிழறிஞரின் ஆட்சி மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் தொடரும்” - பொன்முடி, எ.வ.வேலு புகழாரம்!

அண்ணா சொன்னது போல எதிர்க்கட்சி என்பது மாட்டுக்கு மூக்கனாங் கயிறு போன்றது ஆகையால் எதிர்க்கட்சிகள் இருப்பது தவறு அல்ல என எ.வ.வேலு கூறியுள்ளார்.

“முத்தமிழறிஞரின் ஆட்சி மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் தொடரும்” - பொன்முடி, எ.வ.வேலு புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடத்தில் விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட சார்பில் திருக்கோவிலூர் தொகுதியில் திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி, விழுப்புரம் பகுதியில் டாக்டர் லட்சுமணன், விக்கிரவாண்டி தொகுதியில் புகழேந்தி ஆகியோர் சட்டமன்ற தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை கொண்டு வந்து வைத்து ஆசி பெற்று வணங்கிச் சென்றார்.

முன்னதாக அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி சான்றிதழை வைத்து ஆசி பெற்றார். இந்த நிகழ்வின் பொழுது கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன் கௌதம சிகாமணி உட்பட கட்சியை சேர்ந்த பலர் உடனிருந்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த திமுக துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி கூறுகையில்,

தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி முத்தமிழறிஞர் கலைஞரின் ஆட்சியை போல பொற்கால ஆட்சியாக அமையும். அதேபோல் அதிமுக அரசால் சீர்கெட்டு உள்ள தமிழகத்தில் உள்ள பல்வேறு துறைகளை அமைந்திருக்க ஆட்சியின் மூலமாக கூடிய விரைவில் சரி செய்வோம். முத்தமிழ் அறிஞர் கலைஞரின் ஆட்சி தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடரும்.

“முத்தமிழறிஞரின் ஆட்சி மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் தொடரும்” - பொன்முடி, எ.வ.வேலு புகழாரம்!

அதேபோல, திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஏ.வ.வேலுவும் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் பேட்டியளித்திருந்தார்.

அப்போது பேசிய அவர், அநீதி தோற்றது தர்மம் வென்றது, தமிழ்நாடே கடந்த 10 ஆண்டுகளில் பாழ்பட்டு கிடக்கிறது. திமுக ஆட்சியில் தான் வேளாண் குடி, வணிகர்கள், தொழில் செய்விற் என அனைத்து தரப்பு மக்களின் தேவைகளும் நிறைவேற்றப்பட்டது. 40 ஆண்டு கால அரசியலில் பல்வேறு அனுபவங்களை பெற்றவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அவரது தலைமையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் சமூகநீதி நிலைநாட்டபடும்.

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு முகவரி கொடுத்தது திமுக, மருத்துவ கல்லூரி, சிப்காட், ஒருங்கிணைந்த நீதிமன்றம் என பல்வேறு திட்டங்களை திமுக கொடுத்துள்ளது. 10 ஆண்டுகளில் திருவண்ணாமலை மாவட்டம் வளர்ச்சி கிடப்பில் உள்ளது.

வெற்றி பெற்ற அனைத்து உறுப்பினர்களும் மக்களுக்காக பாடுபடுவோம். வெற்றியை எப்படி பார்க்கிறோம் என்பதை விட எப்படி அடைந்தோம் என்பதே முக்கியம்.

“முத்தமிழறிஞரின் ஆட்சி மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் தொடரும்” - பொன்முடி, எ.வ.வேலு புகழாரம்!

ஜனநாயகத்தில் எதிர்க்கட்சி வெற்றி பெற்று வந்தால் தான் கேள்விகள் கேட்க முடியும் அதனை மையமாக வைத்து தான் மக்களுக்கு பணியாற்ற முடியும். அண்ணா சொன்னது போல எதிர்க்கட்சி என்பது மாட்டுக்கு மூக்கனாங் கயிறு போன்றது ஆகையால் எதிர்க்கட்சிகள் இருப்பது தவறு அல்ல. எதிர்க்கட்சிகள் பாராட்டும் அளவிற்கு எங்களது ஆட்சி இருக்கும்.

பாஜக தமிழகத்தில் வெற்றி பெறுவது புதிதல்ல. பாஜக தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது என்றது ஆட்சியை பிடிக்க முடியாது என்பது தான். ஒருவேளை அவர்கள் வெற்றி பெற்றால் சமூகநீதி அழிக்கப்படும் மக்களுக்கு நிம்மதி இருக்காது என்ற அடிப்படையில் அப்படி கூறப்பட்டது.” எனக் கூறினார்.

banner

Related Stories

Related Stories